Cart

மின்னங்காடி

தரமான நூல்களின் அணிவரிசை.

  • Home
  • Shop
நரியாட்டம்
நரியாட்டம்
Sale

நரியாட்டம்

தமிழரின் விறுவிறுப்பான சல்லிக்கட்டைப் போன்றே, வட தமிழகத்தில் எருதாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த 'வங்கா நரி சல்லிக்கட்டும் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று. தமிழகம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய மேய்ச்சல் நிலங்கள், குறுங்கரடுகள், வயல்வெளிகள் என விவசாய நிலங்களோடு ஒட்டி வாழ்ந்து வந்த நரிகள் இன்று காணாமல் போய்விட்டன. இதற்கு வங்க நரியை குலதெய்வமாக வழிபடும் 'நரி விடுகிற' மக்களின் கலாச்சாரம் மட்டுமே காரணமில்லை. நவீன முறைகளுக்குத் தள்ளப்பட்டு இன அழிவை ஏற்படுத்தியிருக்கும் நாம்தான் காரணம். காக்கத் தவறிய வனத்துறை முதலிய அரசுத் துறைகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு. விளிம்பு நிலையில் இருக்கும் உயிரினங்களை மீட்க அக்கறையான மொழியில் எச்சரித்திருக்கிறார் சீசரித்திருக்கிறார் எழுத்தாளர் நவி.
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
நான் ரம்யாவாக இருக்கிறேன்
Sale

நான் ரம்யாவாக இருக்கிறேன்

‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
பிரம்மராட்சஷ்
Sale

பிரம்மராட்சஷ்

கந்தசஷ்டி கவசத்தில் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்கள் பற்றி ஒருவரி இடம்பெறும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிரம்மராட்சஷ் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். காலம் தோறும் பெண்களைத் தொடரும் ஆண்களின் மனநிலையின் இன்னொரு வடிவம் இது. தொடாதே துரத்து என்ற தலைப்பில் பின்ஞ் மின் நூலகத்தில் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது
Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
Sale

புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்

அன்றைய சென்னையின் சிறு குறிப்புகள் முக்கியமானவை. சென்னையில் டிராம் வண்டி ஓடுகிறது. ஹோட்டல், சர்வர்கள், பத்திரிகை ஆபிஸ், குடித்தன வீடு, நண்பர்கள், மிக மிக முக்கியமாக ஒரு பெண் குழந்தை... இது எல்லாமே சென்னை கதைகளில் இடம்பெறுகின்றன. சில கதைகளில் கதாநாயகனின் மனைவி பெயர் கமலம் என்று இடம் பெறுகிறது. பேருந்துகளில் ட்ராம்களில் அப்போதும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய துயரம். சாலை ஓரத்தில் நிற்பதற்கு கூட இடமில்லாத நெருக்கடி. இந்த நெருக்கடி சூழல் அவருடைய மனதை நெருக்குவதையும் அறியலாம். அவருடைய கதைகளும் அவருடைய வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ ... சுடர்மிகு அறிவுடன் தனக்குப் பொருத்தம் இல்லாத வாழ்க்கை சூழலில் எதிர்கொண்ட அனுபவங்கள் தான் அவருடைய கதைகளாக உள்ளன. அவரை உணரவும் அன்றைய சென்னையை அறியவும் இந்த கதைகள் பெருமளவுக்கு உதவும். தமிழ்மகன்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.