Cart

Sale

புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

அன்றைய சென்னையின் சிறு குறிப்புகள் முக்கியமானவை. சென்னையில் டிராம் வண்டி ஓடுகிறது. ஹோட்டல், சர்வர்கள், பத்திரிகை ஆபிஸ், குடித்தன வீடு, நண்பர்கள், மிக மிக முக்கியமாக ஒரு பெண் குழந்தை… இது எல்லாமே சென்னை கதைகளில் இடம்பெறுகின்றன. சில கதைகளில் கதாநாயகனின் மனைவி பெயர் கமலம் என்று இடம் பெறுகிறது.
பேருந்துகளில் ட்ராம்களில் அப்போதும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய துயரம். சாலை ஓரத்தில் நிற்பதற்கு கூட இடமில்லாத நெருக்கடி. இந்த நெருக்கடி சூழல் அவருடைய மனதை நெருக்குவதையும் அறியலாம்.
அவருடைய கதைகளும் அவருடைய வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ … சுடர்மிகு அறிவுடன் தனக்குப் பொருத்தம் இல்லாத வாழ்க்கை சூழலில் எதிர்கொண்ட அனுபவங்கள் தான் அவருடைய கதைகளாக உள்ளன.

அவரை உணரவும் அன்றைய சென்னையை அறியவும் இந்த கதைகள் பெருமளவுக்கு உதவும்.

தமிழ்மகன்

In stock
மின்னங்காடி தமிழ்

Authors

Meet the Author

புதுமைப்பித்தன்

Book By புதுமைப்பித்தன் View All
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்

Description

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய சிறுகதைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால் திருநெல்வேலி கதைகள், சென்னை கதைகள் என்று பிரித்து விடலாம்.
எடுத்துக்கொள்ளும் கதைக்கரு, மொழி நடை இரண்டிலும் மகத்தான வேறுபாட்டை காண முடியும்.
சம்பளத் தட்டுப்பாடு, நகரத்தின் நெரிசல், பத்திரிகை அனுபவங்கள், கை ரிக்ஷா, காபி, கடற்கரை, வாடகை, இடுக்கான அறைகள் போன்ற புதிய சொற்கள் சென்னை வாழ்க்கையில் தான் இடம்பெறுகின்றன.
சென்னையில் அவர் சொல்லும் பல கிண்டல்கள் வறுமை குறித்த நினைவாக உள்ளன.
இயலாமையும் நிராசையும் அவருடைய கிண்டலுக்கான கருப்பொருள்களாக மாறியதை கவனிக்க முடிகிறது.
வயல்களும் மரம் செடி கொடிகளும் நீரோடைகளும் ஆறுகளும் சுகமான காற்றும் பிள்ளைவாள்களும் சென்னை கதைகளில் அருகிப் போகிறார்கள்.