Cart

மின்னங்காடி

தரமான நூல்களின் அணிவரிசை.

  • Home
  • Shop
யாயும் ஞாயும் குறுந்தொகை குறுங்கதைகள்
யாயும் ஞாயும் குறுந்தொகை குறுங்கதைகள்
Sale

யாயும் ஞாயும் குறுந்தொகை குறுங்கதைகள்

சங்க காலத்திலே அகவுணர்வுகள் எப்படியானவை? அவற்றை இன்றும் பொருத்திப் பார்க்க முடியுமா?   சிறுகோட்டுப் பெரும்பழம் என்று காமத்தைச் சொன்னாளே ஒருத்தி. இன்றும் அப்பெரும் பழம் இருக்கிறதா?   இன்னமும் கையில் ஊமன்கள் வெண்ணை உணங்குகிறார்களா?   முட்டுவென்கொல், தாக்குவென்கொல் என்று அகக் கொந்தளிப்பைப் புறத்தே சொன்ன உணர்வுநிலை இன்றுமுளதா? நிலத்தினும் பெரிதே... வானினும் உயர்ந்தன்று... இப்படி ஈர்ப்பின் இயக்கத்தை இன்றும் சொல்கிறார்களா? இன்றைக்கும் யாயும் ஞாயும் யாராகியரோ என்று எண்ணும்படித்தான் உறவுகள் பிறக்கிறதா? யாரிடம் கேட்பது? யாருக்கு விடை தெரியும்? என் இனிய நண்பர் பவளிடம் கேட்கலாம். அவருக்குத் தெரியும். பவள் நல்ல படிப்பாளி. அதைவிடச் சிறந்த உள்வாங்கி. சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் ஸ்கேனிங் மெஷினல்ல. படித்ததின் உட்பொருளை... மையக்கருத்தை... உணர்வுப்பூர்வமாக உள்வாங்குகிறவர். அதுதான் அவரை இன்றைய தொழில்நுட்ப உலகத்தையும் அன்றைய சங்ககால உலகத்தையும் குறுந்தொகை வழியாக இணைக்க வைக்கிறது.
Original price was: ₹250.00.Current price is: ₹225.00.
ஜெயலலிதா மரணம்
Sale

ஜெயலலிதா மரணம்

அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, 'அப்போலோ முதல் ஆணையம் வரை' என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது. * ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை. * டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை. * அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை. * ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை. * ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை. * வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை. என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.