Cart

New

புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
Sale

புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்

அன்றைய சென்னையின் சிறு குறிப்புகள் முக்கியமானவை. சென்னையில் டிராம் வண்டி ஓடுகிறது. ஹோட்டல், சர்வர்கள், பத்திரிகை ஆபிஸ், குடித்தன வீடு, நண்பர்கள், மிக மிக முக்கியமாக ஒரு பெண் குழந்தை... இது எல்லாமே சென்னை கதைகளில் இடம்பெறுகின்றன. சில கதைகளில் கதாநாயகனின் மனைவி பெயர் கமலம் என்று இடம் பெறுகிறது. பேருந்துகளில் ட்ராம்களில் அப்போதும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய துயரம். சாலை ஓரத்தில் நிற்பதற்கு கூட இடமில்லாத நெருக்கடி. இந்த நெருக்கடி சூழல் அவருடைய மனதை நெருக்குவதையும் அறியலாம். அவருடைய கதைகளும் அவருடைய வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ ... சுடர்மிகு அறிவுடன் தனக்குப் பொருத்தம் இல்லாத வாழ்க்கை சூழலில் எதிர்கொண்ட அனுபவங்கள் தான் அவருடைய கதைகளாக உள்ளன. அவரை உணரவும் அன்றைய சென்னையை அறியவும் இந்த கதைகள் பெருமளவுக்கு உதவும். தமிழ்மகன்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
பெரியாரின் அயல்நாட்டுப் பயணங்கள்
பெரியாரின் அயல்நாட்டுப் பயணங்கள்
Sale

பெரியாரின் அயல்நாட்டுப் பயணங்கள்

மின்னங்காடி பதிப்பகத்தின் புதிய நூல்.
சுமார் ஓர் ஆண்டு காலம் பெரியார் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு இருக்கிற நிலவரங்களை சேகரித்த மிக அருமையான ஆவணம் இது.
ஆனைமுத்து ஐயா மிகச் சிறப்பாக இதைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
பெரியாருக்கு ரஷ்யாவில் நடந்தது என்ன? பெரியார் போஸ் அவர்களை சந்திக்க நினைத்தாரா?
இந்திய அரசு நிறுத்த கட்டுப்பாடுகள்.
அனைத்தும் சுவையான நாவல் போல பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெரியாரை அறிந்து கொள்ள முக்கியமான நூல் இது.
எத்தனை ஆபத்தான பயணம், எத்தனை நெருக்கடிகள், மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் இவர்.
Original price was: ₹110.00.Current price is: ₹100.00.
மாய நகரம்
மாய நகரம்
Sale

மாய நகரம்

``இது மனிதர்களுக்கு இடையிலான போராக இருக்க முடியாது” என்று அவள் தீர்மானித்தாள். மனிதன் மனிதனைக் கொன்றால், அங்கே அழிவின் அடையாளம் இருக்கும். இது ஒருவேளை ‘உயிரியல் போர்’ அல்லது ‘ஏலியன்’ ஊடுருவலா? அல்லது மனித இனத்தையே அடியோடு துடைத்தெறிய வந்த ஏதோ புதிய வகை தொழில்நுட்பக் கருவியா? ``யார் இதில் ஜெயித்தது? வென்றவர்கள் எங்கே? அவர்கள் ஏன் இந்த நகரத்தை ஆக்கிரமிக்கவில்லை?” கேள்விகள் அவளைத் துரத்தின. பாதிக்கப்பட்டது சென்னையா? அல்லது உலகமா? அவள் மீண்டும் அந்த வெள்ளை காரில் ஏறி அமர்ந்தாள். இப்போது அவளது கவலை சென்னையைத் தாண்டியது. மாம்பலமும், மயிலாப்பூரும் மட்டும்தான் மயானமாக இருக்கிறதா? அல்லது மதுரையும் டெல்லியும் லண்டனும் கூட இப்படித்தான் இருக்கிறதா?” தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட `சென்னை தப்பிக்குமா?' என்ற வார்த்தைகள்  அவளுக்கு நினைவுக்கு வந்தன. சென்னைக்கு மட்டும்தான் ஆபத்து என்பதை நினைவில் நிறுத்தினாள். சென்னையைக் காப்பாற்றுவது எப்படி? சென்னையில் தன்னந்தனியாக இருந்தன நந்தினியின் முன்னால் ஒரு பேரமைதி மட்டும் துணையாக இருந்தது.  
Original price was: ₹300.00.Current price is: ₹270.00.