புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
அன்றைய சென்னையின் சிறு குறிப்புகள் முக்கியமானவை. சென்னையில் டிராம் வண்டி ஓடுகிறது. ஹோட்டல், சர்வர்கள், பத்திரிகை ஆபிஸ், குடித்தன வீடு, நண்பர்கள், மிக மிக முக்கியமாக ஒரு பெண் குழந்தை... இது எல்லாமே சென்னை கதைகளில் இடம்பெறுகின்றன. சில கதைகளில் கதாநாயகனின் மனைவி பெயர் கமலம் என்று இடம் பெறுகிறது.
பேருந்துகளில் ட்ராம்களில் அப்போதும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய துயரம். சாலை ஓரத்தில் நிற்பதற்கு கூட இடமில்லாத நெருக்கடி. இந்த நெருக்கடி சூழல் அவருடைய மனதை நெருக்குவதையும் அறியலாம்.
அவருடைய கதைகளும் அவருடைய வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ ... சுடர்மிகு அறிவுடன் தனக்குப் பொருத்தம் இல்லாத வாழ்க்கை சூழலில் எதிர்கொண்ட அனுபவங்கள் தான் அவருடைய கதைகளாக உள்ளன.
அவரை உணரவும் அன்றைய சென்னையை அறியவும் இந்த கதைகள் பெருமளவுக்கு உதவும்.
தமிழ்மகன்
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.