Cart

அறிவியல் புனைகதை

  • Home
  • Shop
நான் ரம்யாவாக இருக்கிறேன்
Sale

நான் ரம்யாவாக இருக்கிறேன்

‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.
மாய நகரம்
மாய நகரம்
Sale

மாய நகரம்

``இது மனிதர்களுக்கு இடையிலான போராக இருக்க முடியாது” என்று அவள் தீர்மானித்தாள். மனிதன் மனிதனைக் கொன்றால், அங்கே அழிவின் அடையாளம் இருக்கும். இது ஒருவேளை ‘உயிரியல் போர்’ அல்லது ‘ஏலியன்’ ஊடுருவலா? அல்லது மனித இனத்தையே அடியோடு துடைத்தெறிய வந்த ஏதோ புதிய வகை தொழில்நுட்பக் கருவியா? ``யார் இதில் ஜெயித்தது? வென்றவர்கள் எங்கே? அவர்கள் ஏன் இந்த நகரத்தை ஆக்கிரமிக்கவில்லை?” கேள்விகள் அவளைத் துரத்தின. பாதிக்கப்பட்டது சென்னையா? அல்லது உலகமா? அவள் மீண்டும் அந்த வெள்ளை காரில் ஏறி அமர்ந்தாள். இப்போது அவளது கவலை சென்னையைத் தாண்டியது. மாம்பலமும், மயிலாப்பூரும் மட்டும்தான் மயானமாக இருக்கிறதா? அல்லது மதுரையும் டெல்லியும் லண்டனும் கூட இப்படித்தான் இருக்கிறதா?” தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட `சென்னை தப்பிக்குமா?' என்ற வார்த்தைகள்  அவளுக்கு நினைவுக்கு வந்தன. சென்னைக்கு மட்டும்தான் ஆபத்து என்பதை நினைவில் நிறுத்தினாள். சென்னையைக் காப்பாற்றுவது எப்படி? சென்னையில் தன்னந்தனியாக இருந்தன நந்தினியின் முன்னால் ஒரு பேரமைதி மட்டும் துணையாக இருந்தது.  
Original price was: ₹300.00.Current price is: ₹270.00.