ஞாலம்
நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி...
வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவுப் பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை, 'வெட்டுப்புலி' ஆக்கினேன். ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான்.
இது 19 ஆம் நூற்றாணடின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டணத்தின் அந்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன.
பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதனின் கதை இது. வரலாற்றுப் பிழையாய் வஞ்சிக்கப்பட்ட விவாயிகளின் கதை. நிலத்தின் கதை.
₹335.00
நரியாட்டம்
தமிழரின் விறுவிறுப்பான சல்லிக்கட்டைப் போன்றே, வட தமிழகத்தில் எருதாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த 'வங்கா நரி சல்லிக்கட்டும் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
தமிழகம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய மேய்ச்சல் நிலங்கள், குறுங்கரடுகள், வயல்வெளிகள் என விவசாய நிலங்களோடு ஒட்டி வாழ்ந்து வந்த நரிகள் இன்று காணாமல் போய்விட்டன. இதற்கு வங்க நரியை குலதெய்வமாக வழிபடும் 'நரி விடுகிற' மக்களின் கலாச்சாரம் மட்டுமே காரணமில்லை. நவீன முறைகளுக்குத் தள்ளப்பட்டு இன அழிவை ஏற்படுத்தியிருக்கும் நாம்தான் காரணம். காக்கத் தவறிய வனத்துறை முதலிய அரசுத் துறைகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு. விளிம்பு நிலையில் இருக்கும் உயிரினங்களை மீட்க அக்கறையான மொழியில் எச்சரித்திருக்கிறார் சீசரித்திருக்கிறார் எழுத்தாளர் நவி.
பிரம்மராட்சஷ்
கந்தசஷ்டி கவசத்தில் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்கள் பற்றி ஒருவரி இடம்பெறும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிரம்மராட்சஷ் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். காலம் தோறும் பெண்களைத் தொடரும் ஆண்களின் மனநிலையின் இன்னொரு வடிவம் இது. தொடாதே துரத்து என்ற தலைப்பில் பின்ஞ் மின் நூலகத்தில் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது
₹250.00
மானுடப்பண்ணை
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது தோன்றுகிறது.
₹200.00
மேன்ஷன்
மேன்ஷன் என்ற என்னுடைய இந்த நாவல், எனது அனுபவம் என்பதைக் காட்டிலும் சக மனிதர்களின் வலி,ஏக்கம்,துரித சந்தோஷம் என சொல்லிவிடலாம். மேன்ஷனில் உடன் தங்கியிருந்தவர்கள் ஹக்கம் தொலைத்து உழன்ற இரவுகளின் பதிவு... நாவலின் ஓட்டத்திற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன்... உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், உறவுகள் இருந்தும் வாழ்வின் திசை தெரியாமல் தவிப்பவர்கள் காலத்தை சபித்துக்கொண்டே நாட்களை அதன் போக்கில் சிரமப்பட்டு நகர்த்துவது சென்னை மட்டுமல்ல... வேறெந்த ஊர்களாக இருந்தாலும் அங்கிருக்கும் மேன்ஷன்களிலோ அல்லது வேறு தங்கும் விடுதிகளிலோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நாவலில் இடம்பெற்ற மேன்ஷனும் அவற்றில் ஒன்றுதான்...அறைகளில் விம்மியவர்களின் உள்ளத்தில் இருந்து வெளியேறி சுவர்களில் மோதி எதிரொலித்த நாட்களே இந்த மேன்ஷன் நாவலாக உங்கள் கைகளில்..
₹250.00