மேன்ஷன்
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
மேன்ஷன் என்ற என்னுடைய இந்த நாவல், எனது அனுபவம் என்பதைக் காட்டிலும் சக மனிதர்களின் வலி,ஏக்கம்,துரித சந்தோஷம் என சொல்லிவிடலாம். மேன்ஷனில் உடன் தங்கியிருந்தவர்கள் ஹக்கம் தொலைத்து உழன்ற இரவுகளின் பதிவு… நாவலின் ஓட்டத்திற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன்… உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், உறவுகள் இருந்தும் வாழ்வின் திசை தெரியாமல் தவிப்பவர்கள் காலத்தை சபித்துக்கொண்டே நாட்களை அதன் போக்கில் சிரமப்பட்டு நகர்த்துவது சென்னை மட்டுமல்ல… வேறெந்த ஊர்களாக இருந்தாலும் அங்கிருக்கும் மேன்ஷன்களிலோ அல்லது வேறு தங்கும் விடுதிகளிலோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நாவலில் இடம்பெற்ற மேன்ஷனும் அவற்றில் ஒன்றுதான்…அறைகளில் விம்மியவர்களின் உள்ளத்தில் இருந்து வெளியேறி சுவர்களில் மோதி எதிரொலித்த நாட்களே இந்த மேன்ஷன் நாவலாக உங்கள் கைகளில்..

