Cart

Shop

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, 'அப்போலோ முதல் ஆணையம் வரை' என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது. * ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை. * டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை. * அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை. * ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை. * ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை. * வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை. என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்
200.00
ஞாலம்

ஞாலம்

நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி... வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவுப் பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை, 'வெட்டுப்புலி' ஆக்கினேன். ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான். இது 19 ஆம் நூற்றாணடின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டணத்தின் அந்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன. பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதனின் கதை இது. வரலாற்றுப் பிழையாய் வஞ்சிக்கப்பட்ட விவாயிகளின் கதை. நிலத்தின் கதை.
335.00
பிரம்மராட்சஷ்

பிரம்மராட்சஷ்

கந்தசஷ்டி கவசத்தில் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்கள் பற்றி ஒருவரி இடம்பெறும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிரம்மராட்சஷ் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். காலம் தோறும் பெண்களைத் தொடரும் ஆண்களின் மனநிலையின் இன்னொரு வடிவம் இது. தொடாதே துரத்து என்ற தலைப்பில் பின்ஞ் மின் நூலகத்தில் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது
250.00