ஜெயலலிதா மரணம்
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, 'அப்போலோ முதல் ஆணையம் வரை' என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது.
* ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை.
* டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை.
* அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை.
* ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை.
* ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை.
* வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை.
என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்
₹200.00
மானுடப்பண்ணை
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது தோன்றுகிறது.
₹200.00
நான் ரம்யாவாக இருக்கிறேன்
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர்
₹200.00
நரியாட்டம்
தமிழரின் விறுவிறுப்பான சல்லிக்கட்டைப் போன்றே, வட தமிழகத்தில் எருதாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த 'வங்கா நரி சல்லிக்கட்டும் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
தமிழகம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய மேய்ச்சல் நிலங்கள், குறுங்கரடுகள், வயல்வெளிகள் என விவசாய நிலங்களோடு ஒட்டி வாழ்ந்து வந்த நரிகள் இன்று காணாமல் போய்விட்டன. இதற்கு வங்க நரியை குலதெய்வமாக வழிபடும் 'நரி விடுகிற' மக்களின் கலாச்சாரம் மட்டுமே காரணமில்லை. நவீன முறைகளுக்குத் தள்ளப்பட்டு இன அழிவை ஏற்படுத்தியிருக்கும் நாம்தான் காரணம். காக்கத் தவறிய வனத்துறை முதலிய அரசுத் துறைகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு. விளிம்பு நிலையில் இருக்கும் உயிரினங்களை மீட்க அக்கறையான மொழியில் எச்சரித்திருக்கிறார் சீசரித்திருக்கிறார் எழுத்தாளர் நவி.