வடக்கேமுறி அலிமா

கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ரூ.100/-

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ரூ.550/-

மேலும் சில ரத்தக்குறிப்புகள்

ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப்   எல்.டி.டி.இயைப்பற்றியும் இலங்கை அரசியலைப்பற்றியும் சொல்லும் போது தம்மிகவின் குரல் தழுதழுத்தது ஒரு கட்டத்தில் அவர் சொன்னார், எல்.டி.டி.இ நீங்கள் நினைப்பதுபோல் வெறுமொரு கொரில்லா அமைப்பல்ல தங்களுக்கென்று காவல்துறையும் நீதிமன்றமும் பள்ளிக்கூடமும் மெல்லாமுள்ள இனை அரசாங்கக் கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் அது. மற்றொரு சந்தர்பத்தின்போது குறிப்பிட்டார். ரூ.60/-

மீன்குகைவாசிகள்

கீரனூர் ஜாகிர்ராஜா வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு. ரூ.190/-

மீன்காரத் தெரு

கீரனூர் ஜாகிர்ராஜா மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும். – கீரனூர் ஜாகிர்ராஜா ரூ.110/-

மணற்குன்று பெண்

கோபோ ஏப் தமிழில்: ஜி. விஜயபத்மா உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார். நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக, அவர் நம் முன்வைக்கும் உள, சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கபட வேண்டியவை. ரூ.220/-

புலப்படாத நகரங்கள்

இடாலோ கால்வினோ தமிழில் : சா. தேவதாஸ் மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels”. ரூ.100/-

பாடும் பறவையின் மௌனம்

ஹார்ப்பர் லீ தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் 1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அலபாமா நகரத்தில் 30களில் வழக்கத்தில் இருந்த இன பிரிவினையை ஆறு வயது குழந்தையின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார். ரூ.360/-

பட்ட விரட்டி

காலித் ஹுசைனி தமிழில்: யூசுப் ராஜா ‘பட்ட விரட்டி’ என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ரூ.250/-