பெண் ஏன் அடிமையானாள் ?

பெரியார் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். ரூ.50/-

பழவேற்காடு முதல் நீரோடி வரை

வறீதையா  கான்ஸ்தந்தின் கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது. மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும்  மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறு கட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன? ரூ.130/-  

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

  கணியன்பாலன் சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையான தமிழ் மொழி பேசுவோர் மற்றும் அம்மக்களின் வாழ்விடம் ஆகியவை குறித்த நம்பகத்தன்மை சார்ந்த ஆய்வுகள் காலந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண்கிறோம். அத்தொடர்ச்சியின் ஒரு கண்ணியாக இந்நூல் அமைகிறது. கணம், யுகம் மற்றும் இனக்குழு சார்ந்த முறையியலில் பண்டையத் தமிழ்ச்சமூகம் குறித்த விரிவான ஆய்வுகள் இல்லை. மார்கன், ஏங்கெல்ஸ், டாங்கே ஆகியோர் இத்துறையில் மேற்கொண்ட ஆய்வுமுறைகளைத் தமிழ்ச் சமூக ஆய்வுக்கு பொருத்திப் பார்க்கும் ஆய்வை இந்நூல் கைக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.பிரித்தானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்திய வரலாறு தொடர்பான பல்வேறு தகவல்களையும், தமிழக வரலாற்றைக் கட்டமைப்பதற்கு இந்நூல் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக வரலாறு ஒப்பீட்டு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பத்து காலகட்ட உருவாக்கம் என்பது இந்நூலின் அடிப்படையான நோக்குமுறையாக அமைகிறது. இதன்மூலம் புலவர்கள், தலைவர்கள் குறித்த மிக விரிவான தரவுகளைப் பெறமுடிகிறது. கால ஒழுங்கில் நிகழ்வுகளைப்புரிந்துகொள்ள இம்முறை உதவும். வீ. அரசு பேராசிரியர்,முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம். ரூ.950/-

நிலமெனும் நல்லாள் நகும்

ஆஷிஸ் கோத்தாரி/பி. வி. ராஜகோபால் /ரிச்சர்ட் ஸ்மித் /ஹீத்தர் முலின்ஸ் – ஓன்ஸ்/அட்ரியனோ   கேட்னியோ/ ரபேல் கோன்லஸ் குஸ்மன்/அமித் சென்குப்தா தொகுப்பும் மொழியாக்கமும் : வெ. ஜீவானந்தம் கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர். இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானது. நம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும். ரூ.80/-  

நவீன அரபு இலக்கியம்

எச்.பீர்முகமது பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ரூ.120/-

தலித் அரசியல்

ஆசிரியர்: அ.மார்க்ஸ் தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது. ரூ.200/-

தமிழி​சை ​வேர்கள்

ஆசிரியர்: நா.மம்மது நமது வரலாறு என்பது ஆவண சான்றுகளின் வழி தெளிவு குறைந்த ஒன்றுதான். ஆனால் தொன்மை குறைவானது அன்று அய்யாயிரம் ஆண்டு பழமை உடைய இசைத்தமிழுக்கும் முழுமையான வரலாறு இதுவரை இல்லை. அழிந்தது போக, அழித்தது போக, எரிந்தது போக, எரித்தது போக, மறைந்தது போக, மறைத்தது போக, தமிழைச் செள்திகளைத் தாங்கி நிற்கும் இசைச் செல்வம், இன்றும் கிடைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் மலைபோல் குவிந்துள்ளது. ரூ.100/-

சோளகர் : வாழ்வும் பண்பாடும்

பகத்சிங் தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. ரூ.50/-

சொல்லித் தீராதது

ம. மணிமாறன் மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன். ரூ.175/-

சுய விமர்சனம்

கீரனூர் ஜாகிர்ராஜா ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ரூ.120/-