கலிலியோ மண்டியிடவில்லை

எஸ். ராமகிருஷ்ணன் அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.85/-

பிகாசோவின் கோடுகள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியங்களைக் கண்டுவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் தேடுதலின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயிற்சியும் ரசனையும் தொடர்ந்த ஈடுபாடும் தேவை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. ரூ.90/-

இசை திரை வாழ்க்கை

ஷாஜி ஷாஜியின் இந்த நூல் நமது காலத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றியும் மறக்க முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. வரலாற்றை உருவாக்கியவர்களைப் பற்றியும் வரலாற்றில் வாழ்பவர்களைப் பற்றியும் விவரிக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜேஷ்கன்னா, பி.பி.ஸ்ரீநிவாஸ், லோஹிததாஸ், சக் பெர்ரி, ஹரிஹரன், மிஷ்கின் போன்ற கலையுலக பிரபலங்களைப் பற்றிய மிக நுட்பமான பார்வைகளை வெளிப்படுத்தும் அதேசமயம் தோல்நோய் மருத்துவர் தம்பையா, அமுல் நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப புரட்சியாளர் ஸ்டீவ் ஜோப்ஸ் போன்றோரைப் பற்றிய அறியப்படாத சித்திரங்களையும் இந்த நூல் வழங்குகிறது. இசை குறித்த ஆழமான பார்வைகள், சினிமா குறித்த நுட்பமான விமர்சனங்கள், சமூகம்-வாழ்க்கை குறித்த புதிய கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என மிகப் பரந்த தளத்தில் விரியும் இந்த நூல் வாழ்வையும் கலையையும் பற்றிய பல புதிய தரிசனங்களை அளிக்கிறது. ஷாஜியின் தேர்ந்த கவித்துவமான நடையும் கூர்ந்த நோக்கும் இந்த நூலை ஒரு புனைகதையைவிடவும் சுவாரசியமான வாசிப்பின்பத்திற்கு உரியதாக்குகிறது. ரூ.170/-

இனத்துவேசத்தின் எழுச்சி

சேனன் இலங்கையில் 2009 தமிழினஅழித்தொழிப்பிற்குப் பிறகான அரசியல் சூழல்களை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழர் அமைப்புகள் முன்னால் இருக்கக்கூடிய சவால்கள், இலங்கை அரசின் கபட நாடகங்கள், பொதுபல சேனா போன்ற அமைப்புகள் மூலமாக புதிய வடிவம் பெறும் சிங்கள இனவாதம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களின் பரிமாணங்கள் என சேனன் ஈழப் பிரச்சினையின் சமகால சிக்கல்களை மிக நுட்பமாக இந்த நூலி¢ல் பரிசீலிப்பதுடன் இந்தப் போராட்டத்தின் எதிர்கால திசைவழிகள் குறித்தும் தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/-

சோவியத்துக்குப் பிந்தைய உலகம்

அ.மார்க்ஸ் சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய வசந்தம், வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டங்கள், சோவியத்துக்குப் பிந்திய உலகின் மாற்றங்கள், மீண்டும் ஒரு பனிப்போரின் துவக்கம், உலக இடதுசாரி இயக்கங்களின் இன்றைய நிலை, பல ஸ்தீனப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்கள், இந்திய -& சீனப் பிரச்சினையில் நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட உண்மைகள், அண்டை நாடுகளுடனான நம் உறவின் விரிசலின் காரணங்கள் எனச் சமகால உலகைத் தன் கூரிய பார்வையின் ஊடாக அலசுகிறார் அ.மார்க்ஸ். ரூ.130/-

சோலை எனும் வாழிடம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும்ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு. ரூ.110/-

காஃப்கா எழுதாத கடிதம்

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே. ரூ.200/-

முள்கிரீடம்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்   கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்கம் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையும் பின்னிணைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துச் சட்டம், போதைப் பொருட்கள் சட்டம், குண்டர் சட்டம் முதலான பல சட்டங்கள் கைவசம் இருந்த போதிலும் இத்தகைய அசாதாரனச் சிறப்பு அதிகாரச் சட்டங்களின் மூலமே அரசுகள் மக்கள் மீதான தமது அதிகாரத்தை எல்லையில்லாததாக்கக் கொள்கின்றன. அரசுகள் அதிகாரத்தை இவ்வாறு பெருக்கிக் கொள்வதன் மூலம் தனது ஜனநாயகத் தன்மையயை இழக்கின்றன. ரூ.90/-

முல்லைப் பெரியாறு அணை

நீதியரசர். கே. டி. தாமஸ் தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான். ரூ.120/-

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

கௌதம சித்தார்த்தன் தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனைமெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில்ஒதுக்கி வைத்து, விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமானபொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது. அப்படியானஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளியதன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அந்த பிம்பத்தை ஞானமார்க்கத்தின் முதன்மையான கடவுளாக உருவேற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பதில் தீவிரமாய்  முனைந்தனர்.அந்தக் கட்டமைப்பு அப்போதைய தருணத்தில் தங்களது ஆதிக்கத்தை முன்வைப்பதற்காக அந்த பிம்பத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் காலச் சுழற்சியில்அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பமாக மாறுகிறது.அதிகாரமாக மாறுகிறது. அதிகாரத்தைத் தக்க வைக்கும்அரசியலாக மாறுகிறது. ரூ.40/-