டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

மனுஷ்ய புத்திரன் நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்ற, எதிர்ப்பு சாரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன. இந்த தலையங்கங்கள் அரசியல் ஆய்வுகள் அல்ல. மக்களின் கோபங்களையும் நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிப்பதே இவற்றின் நோக்கம். ரூ.140/-

கூழாங்கற்கள் பாடுகின்றன

எஸ். ராமகிருஷ்ணன் ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரைகளின் சிறப்பு. ஜென் நமக்குள் மாறாத சந்தோஷத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியும் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார். ரூ.60/-

பறவைக் கோணம்

எஸ். ராமகிருஷ்ணன் திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தன் மனதின் பாடலாக உருமாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். தமிழ் திரை இசைப்பாடல்கள் உருவாக்கிய பாதிப்பையும் அதன்வழியாக உருவான ரசனையையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் கண்டுகொள்ளப்படாத சாதனைகள் குறித்து விரிவாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சினிமா பாடல் என்பது ஒரு மாயக்கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கி காட்டுகின்றன என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. ரூ.120/-

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துலகம்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரம் அவரது எழுத்தியக்கம். சுந்தர ராமசாமி துவங்கி சமயவேல் வரை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூலிது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்புகளை அடையாளம் காட்டுவதற்கும் நாற்பதுக்கும்மேலான விமர்சனக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒரு இளம்வாசகன் தமிழின் முக்கியமானதொரு படைப்பாளுமையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் ரூ.170/-

ரயிலேறிய கிராமம்

எஸ். ராமகிருஷ்ணன் உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்தகம் மட்டும் துணை இருந்தால் போதும் எந்தத் தீவிலும் வாழ்ந்து விடலாம். வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன. ரூ.125/

குறத்தி முடுக்கின் கனவுகள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன இலக்கிய மறுவாசிப்பு – ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், சம்பத், வண்ணதாசன், சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்த மறுவாசிப்புக் கட்டுரைகள் நவீன இலக்கிய படைப்புகள் சார்ந்த புதிய வாசிப்பு அனுபவத்தையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன. புத்தக வாசிப்பு என்பது வெறும் நிகழ்வல்ல. மாறாக, அது கற்றுக்கொள்ளும் தொடர் இயக்கம். நவீன இலக்கியம் சார்ந்த இந்த மறுவாசிப்பு நாம் கவனம் கொள்ளத் தவறிய முக்கிய நூல்களை மீண்டும் அடையாளப்படுத்துகிறது. தீவிர வாசகன் தன்னை ளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய படைப்புகளை அடையாளம் காட்டும் சிறப்பான நூல் இது. ரூ.120/-

கிராமத்து தெருக்களின் வழியே

ந. முருகேச பாண்டியன் இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரிய ஆவணமாக ந.முருகேசபாண்டியன் இக்கட்டுரைகளை எழுதிச் செல்கிறார். ரூ.90/-

தெய்வங்கள் எழுக

வாஸந்தி ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமகாலத்தில் நம்மை உலுக்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பற்றிய அழுத்தமான பார்வைகளை முன்வைக்கும் பதிவுகளுடன் நமது பொதுவான வாழ்வியல், சமூகவியல் நெருக்கடிகளைப் பேசும் கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அநீதியின் அதிகாரத்திற்கு சமூகம் தலைவணங்கிவிடாமல் நீதியைப் பற்றிய நினைவை எழுப்பும் எழுத்துகள் இவை. ரூ.160/-

காண் என்றது இயற்கை

எஸ். ராமகிருஷ்ணன் இயற்கை அறிதல் இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்தக் கட்டுரைத் தொகுதி. ரூ.110/-

சாப்ளினுடன் பேசுங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன ரூ.140/-