பெருகும் வேட்கை

ந. முருகேச பாண்டியன் அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஒடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுரைகளில் நிறுவுகிறார். ரூ.100/-

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்

ந. முருகேச பாண்டியன் முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக, கலாச்சார சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார். ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.160/-

கெட்ட வார்த்தை

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம்போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார். ரூ.225/-

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து. .

ஜெயமோகன் கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது. கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறிஸ்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டு வைத்தது. பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி, மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாக கிடைத்தன. இவை கிபி இரண்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்ற மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி. ரூ.120/-

நலம்: சில விவாதங்கள்

ஜெயமோகன் அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த மருத்துவரும் புரிந்துகொள்ள முடியாது. இந்நூல் உடலையும் உடலுடன் இணைந்த மனத்தையும் குறித்த விவாதங்கள் அடங்கியது. நம்முடைய சமகால மருத்துவப்பிரச்சினைகள் மாற்றுமருத்துவச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான உரையாடல்களை இது திறக்கிறது ரூ.70/-

பேசத்தெரிந்த நிழல்கள்

எஸ். ராமகிருஷ்ணன் இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்சனக் கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள், நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள், அவர்கள் குறித்த ஞாபகங்கள், இவையே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம் ரூ.95/-

வாழ்வது எப்படி?

சாரு நிவேதிதா வாழ்வின் எளிமையான சுவாரசியமான சம்பவங்களை சாருநிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன், கனிமொழி, பீர்பால், வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வெவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன ரூ.80/-

கடவுள்

சுஜாதா இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ரூ.230/-

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன ரூ.170/-

காலமும் கவிதையும்-தமிழச்சியின் படைப்புலகம்

தமிழச்சி தங்கபாண்டியன் தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்கிறது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கௌரவம் அல்ல, அவரது கவிதைக்கு – தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கௌரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணயமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று, கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காகவே என்பதை ‘காலமும் கவிதையும்’ நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும். ரூ.150/-