கடலில் ஒரு துளி

இந்திரா பார்த்தசாரதி ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி, சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம், இந்திய இலக்கியத்தின் போக்குகள், உலக இலக்கிய தரிசனங்கள், சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த அங்கதமும் கூர்மையான அவதானமும்கொண்ட விமர்சனங்கள், நாடகம் குறித்த பார்வைகள் எனப் பல்வேறு தளங்களில் விரிந்து செல்கிறது. நமது காலகட்டத்தின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவரான இ.பாவின் ஆளுமை என்ற கடலின் இன்னொரு துளி இந்த நூல். ரூ.100/-

லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்

ஜெயமோகன் நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால ஏ.கே.லோகித தாஸ் ஆசிரியருடன் நெருக்கமான உறவுள்ளவர். 2009 அன்று தன் 55 ஆவது வயதில் மறைந்த லோகிததாஸ் இப்பக்கங்களில் சொற்களின் புத்துலகில் மீண்டும் பிறந்து வருகிறார். கூடவே மலையாளச் சினிமாச்சூழல் குறித்த ஓர் அறிமுகமும் அலசலுமாக ஆகும் நூல் இது. ரூ.75/-

சரோஜாதேவி

யுவகிருஷ்ணா யுவகிருஷ்ணாவின் இந்த நூல் பாலியல் சார்ந்த விவகாரங்களை மிகுந்த அங்கதத்துடன் பதிவு செய்கிறது. புனைவுகள், செய்திகள் அடிப்படையில் பாலியலைப் பெரும் கொண்டாட்டமாக, கேளிக்கையின் வெளியாக இதில் காண்கிறார். மனிதர்களின் அபத்த நாடகங்களில் பாலியல் வகிக்கும் இடத்தை சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். அந்த வகையில் இந்த நூல் வாசிப்புக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது. ரூ.100/-

செகாவின்மீது பனிபெய்கிறது

எஸ். ராமகிருஷ்ணன் உலக இலக்கிய ஆளுமைகள் தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின். துர்கனேவ், லெர்மன்தேவ், குப்ரின், கொரலங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்த தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார். ரூ.135/-

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்

ஷாநவாஸ் மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று நின்று கவனித்து, நகர்ந்துகொண்டே இருக்கிறது. உணவுப்பண்பாட்டின் வழி சிங்கப்பூரின் வாழ்வியல் முறை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுத்தம் சுகாதாரத்துடன் உணவு தயாரித்து வழங்கும் தனித்தன்மை வாய்ந்த அங்காடிகளான ஹாக்கர் நிலையங்கள், உணவுக்கூடங்கள், இவற்றின் தரத்தை உணவுத்துறை நிர்ணயித்து உணவகங்களை செவ்வனே நிருவகிக்கும் முறை, சமூக மேம்பாடு, பல இன மக்கள் வாழ்வதால் உணவுச்சுற்றுலா மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குவது, சூழல் பாதுகாப்பு, நவீன உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள், இவையனைத்தையும் தன் பதினைந்து ஆண்டுகால உணவக மேலாண்மை அனுபவம், உணவுத்தயாரிப்பு நுணுக்கங்களை மேன்மைப்படுத்திக்கொள்ளவும் மேலும் கற்றுக்கொண்டு புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம், தன்னுள்ளே ஊறும் கலை இரசனை இவற்றோடு பிணைத்து சுவாரசியத்துடன் கட்டமைக்கப்பட்டிருப்பதால் நிறைவான பயண அனுபவம் இந்த நூலை வாசிப்பவருக்குக் கிடைக்கிறது. அறிவியல் விளக்கங்களும் வரலாற்றுப் பின்னணியும் இயல்பாய் பயணத்தில் இணைந்துகொள்வது அருமை. தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த முதல் நூல் உணவை, பண்பாட்டைப் பற்றி மட்டுமன்றி, மனிதமனங்களின் விசித்திரங்கள் ஊடாக, கடந்து வந்த பாதைகளின் வடிவுருவங்களைத் தகர்த்துவிடாமல் அவற்றை மனதில் இருத்தி, வருங்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்தவாறு நிகழ்காலத்தின் ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனித்து அதன்வழி தேடலின் பயணத்தைப் பதிவு செய்திருக்கிறது. ரூ.120/-

இருள் இனிது ஒளி இனிது

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா பார்வைகள் . உலக சினிமாவில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல், அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. ரூ.130/-

முகமற்றவர்களின் அரசியல்

கே.எம்.சரீப் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் துடைத்தெறிகிற ஆற்றலை வழங்கும் படைப்புகளாக அனைத்து படைப்புகளையும் கருத முடியாது. மிதப்பதற்கு எல்லாக் கட்டைகளையும் பயன்படுத்த இயலாது. கரை ஏறுவதற்காகப் பயன்படுத்தும் கட்டை, முதலையாக இல்லாமல் இருக்க வேண்டும். சில கட்டைகள் தான் எப்போதும் மிதந்து கொண்டு, நாம் பற்றியதும் மூழ்கிவிடும் தன்மை கொண்டவை. இந்த இடையூறுகளுக்கு நடுவில் தான் ஒருவர் வாசகனாக வாழவேண்டியதிருக்கிறது. உண்மையை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களை, மடை மாற்றித் திசை திருப்பி விடுகிற “சமூக சேவையை” சிலர் மிகுந்த நுட்பமாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள். எழுதுகிறவர்களின் சமூக அந்தஸ்து, மொழித்திறன், சந்தைப்படுத்தும் ஆற்றல், அவர்களது பரிவாரங்களின் பேரிரைச்சல் இவைகளின் வழியே பெரும் பொய்கள் சாக்கடையைப் போலக் குடிநீர் ஏரிகளில் கலந்து விடுகிற காலம் இது. இத்தகைய இக்கட்டும், இடையூறும் நிறைந்த வாசக சூழலில், எளிய உண்மைகளை, எளிய மொழியில் பேசுகின்றன இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள். வாசகரின் அறிவுத்தேடலுக்கும் சிந்தனைத் திறனுக்கும் துணைபுரிகிற படைப்புகள். மிகுந்த சமூக அக்கறையுடனும், கவனத்துடனும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதி கிருஷ்ணகுமார் ரூ.110/-

அயல் பசி

ஷாநவாஸ் இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவித மான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என மனித வாழ்வின் அடியாதாரமான உணவு எனும் மாபெரும் சக்தியின் சித்திரங்களையும் விசித்திரங்களையும் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. -ஷாஜி ரூ.120/-

புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்

ஆர். அபிலாஷ் புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ‘முகமூடி’ வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது. ரூ.250/-

எப்போது அழியும் இந்த உலகம்?

ராஜ்சிவா தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு எப்படி இப்படிப்பட்ட அறிவு வந்திருக்க வேண்டும் என்பதை மிகவும் சுவாரஸ்யமான தகவல்களுடன் ராஜ்சிவா இந்த நூலில் ஆராய்கிறார். ரூ.140/-