தீராக்காதலி

சாரு நிவேதிதா தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரூ.120/-

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது

சாரு நிவேதிதா தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்லோரும் வாழ்கிற வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளை தனது பார்வையாலும் மொழியாலும் அசாதாரணமானதாக, பிரத்தியேகமானதாக மாற்றிவிடக் கூடியவன் என்பதற்கு அவரது இந்தப்பத்திகள் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. சாருவின் இந்தப் பத்திகளின் மைய ஓட்டமாக இருப்பது எங்கும் இடையறாது பெருகும் அபத்தமே. எண்ணற்ற கோணல்களும் பிறழ்வுகளும் கொண்ட அபத்தம் இது. இந்த அபத்தத்தை அவர் விமர்சிப்பதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. மாறாக அவர் அதை கேளிக்கையாகவும் பரிகாசமாகவும் மாற்றுகிறார். அதுவே இந்தக் கட்டுரைகளை உற்சாகமுடன் வாசிக்கத் தூண்டுகிறது. ரூ.160/-

நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்

ஜெயமோகன் அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை. ரூ.150/-

மால்கம் எக்ஸ்

ரவிக்குமார் மால்கம் எக்ஸின் வரலாற்றை எழுதுவது என்பது மனித குல விடுதலைக்கான நாயகர்களில் ஒருவரின் வரலாற்றை எழுதுவது என்பதே. கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டம், ஆன்மீகம் என்ற இரண்டு பாதையிலும் அவர் மேற்கொண்ட பயணம் உலகெங்கும் அடையாள அரசியலுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தனது வாழ்வையும் உயிரையும் மால்கம் எக்ஸ் எந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்தாரோ அவை இன்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மக்கள் சமூகத்தின் கனவிலும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது. மால்கம் எக்ஸ் என்ற அந்த விடுதலைக் கனவைக் கண்முன் கொண்டு வருகிறது ரவிக்குமாரின் இந்த நூல். ரூ.100/-

தோன்ற மறுத்த தெய்வம்

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும் ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. ரூ.130/-

வாழிய நிலனே

சுகுமாரன் சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் வழியாகவும் ஒரு ஆழமான படைப்பாளியின் இதயத்தின் வழியாகவும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுகுமாரனின் கச்சிதமான செறிவான உரைநடை எழுப்பும் துல்லியமான மனச்சித்திரங்களம் இந்தத் தொகுப்பு ஒரு சிறந்த உதாரணம். ரூ.115/-

பள்ளிப்பிராயம்

மணா குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் பாதைகளியும் தீர்மானிக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் தங்கள் குழந்தைமையின் அழியாச் சித்திரங்களை எழுதுகிறார்கள். அந்த சித்திரங்கள் வழியே உருவாகும் களங்கமற்ற பருவத்தின் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுபவை ரூ.75/-

சினிமா சினிமா

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா சினிமாவின் அழகியல் மற்றும் அவை முன் வைக்கும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.115/-

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

ராஜ்சிவா உலகில் விநோதங்கள் என்று கருதப்படுபவைகளில் மிகவும் முக்கியமான விநோதமாகக் கணிக்கப்படுவது, க்ராப் சர்க்கிள்ஸ் என்றழைக்கப்படும் பயிர் வட்ட விநோதம்தான். இந்த க்ராப் சர்க்கிள்கள் யாரால், ஏன், எப்படி உருவாக்கப்படுகின்றன? என்ற கேள்விதான் இங்கு மர்மப்பாதைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இவை தொடர்பாக உலகம் முழுவதும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றும், அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன என்றும் தெரியவருகின்றனது. இந்த மர்மங்களில் சிலவற்றை ஆராய்வதே இந்த நூலின் நோக்கம். ரூ.175/-

தண்ணீர் யுத்தம்

சுப்ரபாரதி மணியன் உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழை… ரூ.40/-