சிலந்தியும் ஈயும்

வில்ஹெல்ம் லீப்னெஹட் லீப்நெஹ்ட்( 1826_-1900 )ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின்.இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது.ஈக்களை தன் வலைப் பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள்,உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக் கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்கலின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம். ரூ.10/-

கார்-ஆ?பேருந்தா?

பேரா.மணி கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும்.கார் பெருக்கத்தால் காற்று மாசு படுவது அதிகரிக்கிறது.போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன.நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை.கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும்.ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப் போராட்டமே அடங்கியுள்ளது.” ரூ.10/-

மார்க்சியத்தின் எதிர்காலம்

பிரபாத் பட்நாயக் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை.அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது.சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும்.ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது?ஒன்றை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.மார்க்சியம் என்பது உறைந்து-போன உடலாக இருக்கும் கருத்துக்கள் அல்ல.மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும்.இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. ரூ.10/-

நான் ஏன் நாத்திகன்?

பகத்சிங் “பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா என்று தனக்குள் பயணம் செய்து விடை காணும் புத்தகம் இது.தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான அமரர் ஜீவா அவர்களின் இலகுவான கூர்மையான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.சிறுவயதில் கடவுள் பக்தராகவே பகத்சிங் இருந்துள்ளார்.தினசரி காலை மாலை பிரார்த்தனைகள் செய்கிறவராக காயதிரி ஜெபம் செய்கிறவராகவே இருந்தார்.அவருடைய தந்தையாரும் பக்திமானாகவே இருந்தார்.பின்னாட்களில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்கத் துவங்கிய பிறகு அவர் படித்த புத்தகங்களும் தோழர்களுடன் விவாதித்ததுமே அவரை நாத்திகராக மாற்றியது.அராஜகவாதத¢தில் நம்பிக்கை கொண்ட தலைவரான பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் எனூம் நூல்,நிர்லம்ப சாமியால் எழுதப்பட¢ட பகுத்தறிவு போன்ற நூல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் சூழ்ந்த தங்கள் நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த லெனின்,ட்ராட்ஸ்கி போன்றோர் பச்சை நாத்திகர்கள் என்பதை அறிந்தேன்.நானும் பச்சை நாத்திகனானேன் என்கிறார் பகத் சிங்.” ரூ.10/-

அரசு

லெனின் அரசு என்பது என்ன?அது எவ்வாறு தோன்றியது?முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது?என்கிற கேள்விகளுக்கு விடையாக1919இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம்.முதலாளித்துவ அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப் பூர்வமாக லெனின் விளக்குகிறார்.வன்முறைகளைப் பயன்படுத்தும்-வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை.அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள்,சமுதாயக் கட்டுப்பாடு,வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ,குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன.சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது.சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது,நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட¢டினி கிடக்கும் நிலை நீடித்திராத பொது,இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம்.இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடியும் புத்தகம் ரூ.10/-

வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்

பிளெஹானவ் சரித்திரத்தில் தனிமனிதனின் பங்கு பற்றி மார்க்சிய தத்துவம் ஏற்றுக் கொண்ட உண்மையை மிக அழகாக விளக்கும் நூல் ரூ.15/-

மகாத்மா மதசார்பின்மை மதவெறி

பிபன் சந்திரா மதவெறியை மகாத்மா எதிர்கொண்ட விதத்தையும்,மதச்சார்பின்மையை அவர் கணித்த விதத்தையும் பிபன் சந்திரா ஆழ்ந்த தெளிவுடன் கூறியிருக்கிறார்.பன்முக தன்மையுடன் இருந்த காந்திஜியை உள்ளும் புறமுமாக அறிய இந்நூல் வழிவகை செய்கிறது.அனைத்து முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் வன்முறை அல்லாத தீர்வை காண்பதில் காந்தியின் முயற்சிகளை விவரிக்கிறார் ரூ.20/-

சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்

சு.பொ.அகத்தியலிங்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு,என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.உங்கள் இடையே இருந்து,நீங்களும் உங்களுடன் ஒருயிராக,உங்களின் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும்,மற்றெதை நான் விரும்ப முடியும்–சிங்காரவேலர் ரூ.20/-

தொழிற்சங்க இயக்கம் எனது நினைவுகள்

பி.ராமமூர்த்தி இந்தியாவில் முதன் முதலில் பம்பாயில் தொழிற்சாலை உருவானாலும் இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில்தான் தொழிற்சங்க இயக்கம் தோன்றி-யது.இது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான மைல்-கல்.இந்திய தொழிற்சங்கத் தலைவர்-களில் முக்கியமானவரான தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் இந்நூலில் தொழிற் சங்க வரலாற்றையும்,தொழிற்சங்க அரசியலையும் தம் நினைவுகளிலிருந்து பதிவு செய்துள்ளார்.அடுத்த தலைமுறையினருக்கு தொழிற்சங்கத்தைப் பற்றி கற்றுக் கொள்ள இந்நூல் உதவுகிறது. ரூ.25/-

பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை

கேரிவால் தமிழில்:ஏ.நிசார் அகமது தேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும்,அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது.இந்நூலில் அறிமுகம்,வரலாறு வார்த்தெடுத்த வீரவாள்,ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும்(அனார்சிஸமும்)அதற்கு மேலும்,மார்க்சியத்தை நோக்கி,திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ரூ.50/-