அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே

எம்.ஜி.சுரேஷ் எழுதிய இந்த சிறிய நூல் மேற்கத்திய தத்துவப் போக்கின் சுருக்க்மான வரலாறு. சாக்ரடீஸ் காலம் முதல் தெரிதா காலம் வரை அலசும் அற்புத நூல். பின்நவீனத்துவத்தைப் பின் பற்றி பல நூல்கள் எழுதியவர். ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (1999), ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), ‘சிலந்தி’ (2001), ‘யுரேகா என்றொரு நகரம்'(2002), ’37′(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ (2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ரூ.70/-

நன்றி ஓ ஹென்றி

எஸ்.சங்கரநாராயணன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்குமேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு, பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களுக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.

தமிழ் நூல் வெளியீட்டாளர்கள்

அகத்தியர் புத்தக நிலையம், திருச்சி. அகரம், தஞ்சாவூர். அடையாளம், திருச்சி. அணியகம், சென்னை. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம், அண்ணாமலை நகர், சிதம்பரம். அநுராகம், சென்னை. அபிராமி பப்ளிகேசன்ஸ், சென்னை. அமிர்தவள்ளிப் பதிப்பகம், திருச்சி. அம்மு பதிப்பகம், சென்னை. அம்ருதா பதிப்பகம், சென்னை. அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை. அருள் புத்தகாலயம், சென்னை. அருணோதயம், சென்னை. அருள்மொழிப் பதிப்பகம், சென்னை. அலைகள் வெளியீட்டகம், சென்னை. அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை. அறிவு நிலையம், சென்னை. அறிவுநிதிப் பதிப்பகம், சென்னை. அறிவுப் பதிப்பகம், சென்னை. அன்னம் – அகரம், தஞ்சாவூர். ஆசியக் கல்விச் சேவை, சென்னை. ஆனந்த நிலையம், சென்னை. ஆழி பதிப்பகம், சென்னை. இமயம் பதிப்பகம், நாகப்பட்டினம். இயல்வாகை, திருவண்ணாமலை. இலக்குமி நிலையம், சென்னை. இளங்கோ புத்தக நிலையம், திருச்சி. இரத்தின நாயக்கர் அன் சன்ஸ், சென்னை. இலக்கிய சோலை பதிப்பகம், செனனை உமா பதிப்பகம், சென்னை. உரத்த சிந்தனைப் பதிப்பகம், சென்னை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. உயிர்மை பதிப்பகம், சென்னை. உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. ஏகம் பதிப்பகம், சென்னை. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. ஓவியா பதிப்பகம், சென்னை. ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு கபிலன் பதிப்பகம், புதுச்சேரி. கிழக்கு பதிப்பகம், சென்னை. கௌதம் பதிப்பகம், சென்னை. கங்கை பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. கண்ணப்பன் பதிப்பகம், சென்னை. கண்ணபிரான் பதிப்பகம், சென்னை. கலைமகள் டிரேடர்ஸ், சென்னை. கவிதா பப்ளிகேசன், சென்னை. கற்பகம் புத்தகாலயம், சென்னை. கலைஞன் பதிப்பகம், சென்னை. கலைவாணி புத்தகாலயம், சென்னை. காகம் பதிப்பகம், இலங்கை காந்தி இலக்கியச் சங்கம், மதுரை. காந்தளகம், சென்னை. காலச்சுவடு, சென்னை. காவ்யா, சென்னை. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை. கீதம் பபளிகேசன்ஸ், சென்னை. கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை. குமரன் பதிப்பகம், சென்னை. குமுதம், சென்னை. குழந்தைகள் உலகம், சென்னை. கௌரா ஏஜன்சீஸ், சென்னை. கோமதி பதிப்பகம், கம்பம். சக்தி புத்தக நிலையம், சென்னை.

வனவாசி

ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய வனம் எப்படி நகரமயமாகிறது என்பதை விவரிக்கும் மேற்கு வங்கக் கதை. நம் கண் முன்னாலேயே நமக்குத் தெரியாமல் காடு எப்படி காணாமல் போகிறது என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது. ரூ.170/-

நக்சல்பாரி முன்பும் பின்பும்

 சுனிதிகுமார் கோஷ் ரூ.350.00 இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது

வனம் எழுதும் வரலாறு

சத்நாம் தமிழில்: பிரசன்னா பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது. ரூ.130/-

பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் தமிழில்:  போப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. ரூ.200/-

பெரியார் : ஆகஸ்ட் 15

பெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல். ரூ.450/-