காந்தி

எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்-துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்ளாதவர். ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக்கொண்டவர். – அசோகமித்திரன் ரூ.300/-

தக்கையின் மீது நான்கு கண்கள்

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். – சா.கந்தசாமி ரூ.100/-

ஜெயமோகன் குறுநாவல்கள்

நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ஆழத்திலிருந்து நெளியும் இச்சையின் விஷப்பரப்பைச் சொன்ன இறுதிவிஷமும் என் நினைவில் மீண்டும் மீண்டும் வரும் ஆக்கங்கள். ரூ.280/-

வாழ்ந்தவர் கெட்டால்

தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. – க.நா.சுப்ரமணியம் ரூ.60/-

அவதூதர்

‘அவதூதர்’ நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்-பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்தி-லிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்-கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக் கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன். ரூ.180/-

பித்தப் பூ

மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்-தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. ரூ.70/-

அவரவர் பாடு

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.   ரூ.80/-

ஒருநாள்

க.நா.சுப்ரமணியன் நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்-திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறை-யைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணு-வார்கள் என்று நம்புகிறேன். ரூ.140/-

ரெயினீஸ் ஐயர் தெரு

வண்ணநிலவன் இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ண-நிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்-தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன. ரூ.70/-

கம்பா நதி

நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். வண்ணநிலவன் ரூ.90/-