அப்பாவின் சிநேகிதர்

தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் படைப்பு களில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்பு களில் இடம்பெறுமா? இப்படைப்புகளே சுயசரிதைதானோ?இதற்கு ஆமாம் & இல்லை என்று ஒரு சொல்லில் பதில் தந்துவிட முடிவ தில்லை. Òஎங்கள் பக்கம் இல்லை என்றால் நீங்கள் எதிரிப் பக்கம்Ó என்று குழுக்களாக இயங்குபவர்கள் நிலைமையை எளிமைப்படுத்திவிடலாம், ஆனால், யதார்த்தம் எளிமையானதல்ல. இத்தொகுதியிலுள்ள பல கதை களின் பல பாத்திரங்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஆதார மனிதர்கள் உண்டு. ஆனால், இக்கதைகள் அந்த மனிதர்களின் கதைகளல்ல. இந்த அளவுக்கு நான் சொல்ல முடியும்¢; இவர்களை நான் அறிவேன்; இவர் களுக்கு நன்றி செலுத்துவதும் என் கதைகளின் ஒரு நோக்கம் ஆகும். இக் கதைகளை மிகுந்த பிரயாசைப்பட்டுத்தான் நான் எழுதினேன் என்றாலும், இக்கதைகளை எழுதியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு. – அசோகமித்திரன் ரூ.180/-

மீன்கள்

தெளிவத்தை ஜோசப் இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது ‘மீன்கள்’. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாகச் சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப் பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.பலகோணங்களில் திறக்கும் ஒன்பது முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படிப் போராடினர், எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு. – ஜெயமோகன் ரூ.100/-

அப்பாவின் வேஷ்டி

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். – பிரபஞ்சன் ரூ.200/-

ருசி

பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன். – பிரபஞ்சன் ரூ.180/-

மரி என்ற ஆட்டுக்குட்டி

குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம். – பிரபஞ்சன் ரூ.170/-

தபால்காரர் பொண்டாட்டி

அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும். – பிரபஞ்சன் ரூ.180/-

நாளைக்கும் வரும் கிளைகள்

பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை. ரூ.140/-

கடைத்தெருக் கதைகள்

நுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றிருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன. – இரா. இளஞ்சேரன் ரூ.130/-

புதிய வாசல்

இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதிய வர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளை தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன். காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்டிருந்தார். சட்டென்று எவராலும் சொல்லமுடியவில்லை. சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால், சென்ற சில வருடங் களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக் கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. – தொகுப்பு: ஜெயமோகன் ரூ.150/-

அக்கா

எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான். – அ.முத்துலிங்கம் ரூ.90/-