வலையில் விழுந்த வார்த்தைகள்

ச. தமிழ்ச் செல்வன் “பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன் வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி.பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக பண்பாட்டுப் போராளியாகப் பரிணாமம் அடைந்ததை தமிழ்ச்செல்வன் நம்மை ஈர்க்கும் இயல்பான மொழியில் கூறிச் செல்வது ரசனைக்குரியது.வாசிப்பவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்காமல் அவரைத் தனது நெடும் பயணத்தடத்தில் கைகோர்த்து அழைத்துச் செல்வதில்,சகபயணியாக உணரவைப்பதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.அவருடைய எழுத்துகளின் வழியே விரியும் உலகத்தை அரை நூற்றாண்டுத் தமிழ்நில வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் நாம் கணக்கில் கொள்ளலாம்.” ரூ.200/-

தமிழ் இலக்கியம் ஒரு புதிய பார்வை

கே.முத்தையா “இந்நூலில் சங்க காலத்தையும் சங்க இலக்கியங்களையும் மட்டுமின்றி கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சைவ- வைணவ இலக்கியங்கள் என ஒரு விரிந்ததளத்தில் தன் அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.” ரூ.350/-

எல்லாமாகிய எழுத்து

சா.கந்தசாமி 45ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி,இலக்கியம் குறித்த தனது அபிப்பிராயங்களையும்,அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.90/-

என் சக பயணிகள்

ச. தமிழ்ச் செல்வன் “வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். “ ரூ.120/-

சந்தித்தேன் (ஆளுமைகளுடனான நேர்காணல்கள்)

ச. தமிழ்ச் செல்வன் ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான்,பங்கு கொள்கிறான்,எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான். ரூ.60/-

கட்டளைக் கலித்துறை

சி.வை.தாமோதரம் பிள்ளை “அரிய இந்நூலை மீண்டும் பதிப்பிப்பது நம்மவர் கடமையாகும்.இக்காலத்தில் நூற்பிரதி கிடைப்பதாயில்லை” என்னும் கலாநிதி க.கைலாசபதியின் விழைவு இந்நூல்வழி ஆய்வும் பதிப்புமாக ஒருசேர நிறைவேறியிருக்கிறது. ரூ.70/-

பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்

ய. மணிகண்டன் பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது; அரிய ஆதாரங்களை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றது. ரூ.140/-

அறிவியல் களஞ்சியம்2

ஆத்மா கே.ரவி ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது. ரூ.190/-

கடவுள் உண்டா?இல்லையா?

ஏ.பாலசுப்பிரமணியம் மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன.படுகொலைகள் இன்றும் நடக்கின்றன.ஆனால்,நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது.பித்தப்பை என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது.உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள்,மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம்.அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும்.ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள்.பின் அவற்றுக்கான விடைகள்,பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது.இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது.படைப்பு என்பதே இல்லை.ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது.வெறும்16பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன? ரூ.10/-

கலிலீயோ-அறிவியலில் ஒரு புரட்சி

வி.முருகன் கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?அவரின் கண்டுபிடிப்புகள் ஏன் பல சர்ச்சைகளை அவர் காலத்தில் எழுப்பின?அவருடைய சாதனைகளும் வேதனைகளும் எப்படி பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின என்று விரிவாக விளக்குவதுதான் இந்நூல். ரூ.50/-