இருட்டிலிருந்து வெளிச்சம்

சினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதி யானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்பின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கே யுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள் மீது அவர் கொண்டுள்ள பரிவும், அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன. – அசோகமித்திரன் ரூ.240/-

அவள் அப்படித்தான்

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. ரூ.120/- – சோமசுந்தரேஸ்வர்

மிட்டாய்க் கடிகாரம்

முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை… குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது. வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்… இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன. நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை. – உமா மகேஸ்வரி ரூ.100/-

தலைமறைவு காலம்

இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர் களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறேன். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கெனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச் சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஏமாற்று விளையாட்டுத்தான். எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள், சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள் மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன. – யவனிகா ஸ்ரீராம் ரூ.90/-

ராணியென்று தன்னையறியாத ராணி

ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.50/-

நீர் அளைதல்

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர் அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள். – எம்.டி. முத்துக்குமாரசாமி ரூ.90/-

சூரியன் தகித்த நிறம்

தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார். ரூ.70/- பிரமிள்

சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள்

தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன. ரூ.70/- – கால சுப்ரமணியம்

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது. ரூ.90/-

அவன் எப்போது தாத்தாவானான்

தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. ரூ.100/-