நோய்களிலிருந்து விடுதலை

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள். நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப முடியும். ரூ.60/-

நமது மருத்துவ நலப் பிரச்சி​னைகள்

ஆசிரியர்: அ. மார்க்ஸ்   கடந்த பத்மண்டுகளாக மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப்பார்வையை… ரூ.120/-

தொடு சிகிச்சை கற்போம்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் “எல்லா மருத்துவ முறைகளும் ‘மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப்  பின்பற்ற வேண்டாம்’ என்றே கூறுவது வழக்கம்.ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்கள் கற்றுக்கொள்ளும் இந்த எளிய மருத்துவத்தைக் கடைபிடிப்பது அவசியம். அதுவே நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் உடல்நலத்தை மீட்டெடுக்கும் நல்வழியாகும்.நீங்கள் தவறான  அக்குபங்சர் புள்ளியைத்   தேர்வு செய்து சிகிச்சை அளித்தாலும் கூட எதற்காக சிகிச்சை அளித்தீர்களோ அந்த தொந்தரவு குணமாகாமல் போகுமே தவிர தேவையற்ற விளைவுகளை அக்குபங்சர் சிகிச்சை ஒருபோதும் உருவாக்காது”. ரூ.70/-

தாந்தரீகம்

உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் அரவிந்த் & சாந்தா காலே தமிழில்: பெரு. முருகன் அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும் நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பால்வெளி மண்டலமும், ஆகாசத்தில் உறைகின்ற பிரபஞ்சமும், உங்கள் கைகளில் இறுக்கப்பட்டு கிடக்கின்ற உங்களின் துணையும், நீங்களே. எரிகின்ற இன்பத் தீயில் எரியப்போகும் நீங்கள் காலத்தை வென்று சாகாவரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள். ரூ.150/-

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்

அக்கு ஹீலர்  அ .உமர் பாரூக் 95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை. கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக ஒன்றாவது, இரண்டாவது படிக்கும் ஆரம்பக் கல்வி அறிவைக் கொண்டு அந்த தத்துவத்தைச் சோதித்தாலே அது பொய்யானது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானதாகும். அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துத் தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடம் இருந்து பணம் பறிக்கின்றன. ரூ.40/-  

உங்களுக்குள் ஒரு மருத்துவர்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன்  அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு? ரூ.50/-  

முள்கிரீடம்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்   கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்கம் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையும் பின்னிணைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துச் சட்டம், போதைப் பொருட்கள் சட்டம், குண்டர் சட்டம் முதலான பல சட்டங்கள் கைவசம் இருந்த போதிலும் இத்தகைய அசாதாரனச் சிறப்பு அதிகாரச் சட்டங்களின் மூலமே அரசுகள் மக்கள் மீதான தமது அதிகாரத்தை எல்லையில்லாததாக்கக் கொள்கின்றன. அரசுகள் அதிகாரத்தை இவ்வாறு பெருக்கிக் கொள்வதன் மூலம் தனது ஜனநாயகத் தன்மையயை இழக்கின்றன. ரூ.90/-

முல்லைப் பெரியாறு அணை

நீதியரசர். கே. டி. தாமஸ் தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான். ரூ.120/-

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

கௌதம சித்தார்த்தன் தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனைமெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில்ஒதுக்கி வைத்து, விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமானபொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது. அப்படியானஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளியதன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அந்த பிம்பத்தை ஞானமார்க்கத்தின் முதன்மையான கடவுளாக உருவேற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பதில் தீவிரமாய்  முனைந்தனர்.அந்தக் கட்டமைப்பு அப்போதைய தருணத்தில் தங்களது ஆதிக்கத்தை முன்வைப்பதற்காக அந்த பிம்பத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் காலச் சுழற்சியில்அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பமாக மாறுகிறது.அதிகாரமாக மாறுகிறது. அதிகாரத்தைத் தக்க வைக்கும்அரசியலாக மாறுகிறது. ரூ.40/-

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும்   மத நம்பிக்கைகள்  பொதுவாகவே பிறப்போடு வருகின்றன.ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள்சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில்அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’ வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே ‘பாவம்’ என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது ‘நம்பிக்கைகள்’ பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின்  மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை,வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கேஉரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம். ரூ.220/-