1947

ச. தமிழ்ச் செல்வன் இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்து1947-இந்தியாவிழி தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.அகதிகளானது மட்டுமல்ல துயரம்.மதப் பகைமை மூட்டி வளர்க்கப்ப்ட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன.பல்லாயிரக்கணுக்கானபெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளநாதன் காரணமாக கருவுற்றனர்.கருசிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில்வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம்.வழியில் தொலைந்து போன பெற்றோர்களை தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகனே,என்றும் மகளே,என்றும் அம்மா,என்றும் அப்பா,என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிக்ரமான புத்தகம். ரூ.20/-

பகத்சிங்

அன்வர்உசேன் அமர வாழ்வு பெற்ற வீரருள் மாவீரன் பக்த்சிங்,காந்தியடிகள் தலைமையில் தேச விடுதலை இயக்கம் நாளும் பால்ம் பெற்று வருகையில்,உழைக்கும் வர்கத்தின் புரட்சிகர இயக்கம் பகத்சிங் போன்ற’அக்னிக் ஞ்சு’களை ஈன்று புறத்தந்தது.நாட்டுப்பற்று என்ற பெயரால் குறுகிய தேசியவாதம் எனும் நச்சு பரவிவந்த நாட்களில் விஞ்ஞானி பூர்வமான சொசலிசம் கம்யூனீசம் எனும் கருத்தாக்கங்களை முன்னெடுத்து சென்றவர் பக்த்சிங்.கல்லூரி நாட்களிலெ.யே மார்கசிய மெய்ஞானத்தை உள்வாங்கிய போராளி பகத்சிங்.’சமரசம்’எனும் பொய்மையை முற்றாக நிராகரிக்கும் பக்குவத்தை அந்த இளமைப் பருவத்திலேயே அவர் பெற்றிருந்தார்.இளம் புரட்சியாளர்களின் நாயகனாகப் போற்றப்படும் தெளிந்த சிந்தனையும் ஆறாத போர்க்குணமும் கொண்டவர்.கம்யூனீசம் பேரிழக்கியங்கள் கிடைக்கப்பெறாத அந்த நாள்களில் மார்கசியத்தை ஆய்ந்துணர்த்த அறிஞ்ர் அவர்.தம்முயிர் ஈந்தும் மக்களைகாக்கும் நெஞ்சுருதி படைத்த சமதார்மிகளுக்கு என்றும் ஆதர்சமாக இருப்பது பக்த்சிங்கின் வாழ்க்கை.வீரச்செறிவுதான் கம்யூனிஸ்ட்களின் அடையாளம்.அதற்குச் சான்றாகத் திகழ்வது அவருடைய வாழ்க்கை. ரூ.30/-

காரல் மார்க்ஸ்

வெ. சாமிநாத சர்மா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்து கொள்கிறது.அப்படி ஒரு வாய்ப்பு மார்கஸிக்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவ நம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து,கோழைத் தனங்களைப் புதைத்தார்.பூத் துலகம் காண ஒரு தத்துவத்துக்காய் போராடினார்.மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார்.அதன் பிறகு போராட்டமயமானது.எல்லா மாயங்களும் நிகழ்த்தன.பொருளாதாரத்திலும்,தத்துவதிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது. ரூ.80/-

மதச்சார்பின்மை

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதத்தையும் அரசியலையும் முற்றிலுமாக பிரிப்பது,மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்பதாகும்.மதச்சார்பின்மை என்பதன் பொருள்,மதமானது அரசியலிலிருந்து மதத்தை கல்வியிலிருந்து முற்றிலும் பிரிப்பதுவுமாகும்.அரசியலிலும் நிர்வாகத்திலும் அரசியலிலும் கல்வியிலும் மதத்தை தலையிட அனுமதிப்பதே வகுப்புவாதமாகும் ரூ.20/-

கிராமப்புற ஏழைகளுக்கு லெனின்

லெனின் சிறு விவசாயி அதிகாலையில் எழுந்து இரவுவரை உயிரைவிட்டு உழைக்கிறான் என்றால் அவனது வறுமை மற்றும் தேவைகள் தான் அவ்வாறு உழைக்க நிர்பந்திக்கின்றன.இதனைத்தான் எளிமையான வாழ்க்கை லாபகரமான விசாயம் என்றெல்லாம் வானளாவ புகழ்கின்றனர்.அவன் ஒரு ரொட்டித் துண்டை தின்றுவிட்டு வேலைக்குப் போகிறான்.எண்ணி எண்ணி செலவு செய்கிறாள்.ஒரு ஜோடி ஆடை களையே மூன்று வருடம் மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறான்.தகிகும் கோடையில் செருப்பின்றி நடக்கிறான்.உடைந்து போன கலப்பையைக் கயிற்றைக் கட்டி சரி செய்கிறான்.பசுவிற்குக் கூரையிலிருந்து மக்கிப்போன வைக்கோலைப் பிடுங்கி தீனியாகக் கொடுக்கிறான் இதுதான் விவசாயிகள் சிக்கனமாக வாழும் வட்சனம்-லெனின் ரூ.40/-

கற்பனவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்

ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் பல பதிப்புகள் பல்லாயிரம் பிரதிகள் கண்ட நூல். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சோசலிசம் என்ற பெயரில் பல குழப்பமான தத்துவங்கள் வலம் வந்தபோது மார்க்சும் எங்கெல்சும் பிரதிநிதித்தும் செய்த விஞ்ஞான சோசலிச கருத்துகளை விளக்கி எங்கெல்ஸ் எழுதி முதன் முறையாக பிரெஞ்சு மொழில்1880ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ரூ.70/-

விழி திறந்தது வழி பிறந்தது

தா பாண்டியன் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட1970காலகட்டத்தில் நடந்த உலக,இந்திய,தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா.பண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன?எந்தக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தன?என்பவற்றை மிகத் தெளிவாக இந்த நூலில் அறிய முடிகிறது.இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலச் சூழலையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் மகத்துவம் புரியும் ரூ.120/-

சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி 46ஆவது பிரிவிற்குச் செல்லுங்கள்,அது,தலித்துகள்,பழங்குடியினர் மற்றும் இதர நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ரூ.10/-

டெங் ஷியோ பிங் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்

மிலிட்டரி பொன்னுசாமி சுமார் 70 ஆண்டுகள் அந்தப் பெரும் நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மகத்தான சீனப் புரட்சியின் தளகர்த்தர்களில் ஒருவருமான டெங் ஷியோ பிங் அவர்களின் கருத்துகள், ஏற்பு – ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டுத் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்டவை. அந்த வகையில் இன்றைய சீனத்தைப் புரிந்துகொள்ள, அதன் மகத்தான புதல்வர்களில் ஒருவரான டெங் ஷியோ பிங் அவர்களின் சிந்தனையை அவரது எழுத்துகள் மூலமே அறிந்துகொள்ள அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் உதவும். ரூ.220/-

செய்தியின் அரசியல்

ஆர். விஜய்சங்கர் முதலில் சன் டி.வி. பாருங்கள்; பின் ஜெயா டி.வி. பாருங்கள்;பின் கலைஞர் டி.வி. பாருங்கள்;நேரமிருந்தால் மக்கள் தொலைக்காட்சி பாருங்கள். இவை அனைத்தும் கொடுக்கும் செய்திகளின் சராசரியை வைத்து உண்மை செய்தியை ஊகித்துக் கொள்ளுங்கள். ரூ.10/-