ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி

லெனின் இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் லெனின்’ஏகாதிபத்தியம்’ஒரு குறிப்பிடத்தக்க நூல் ஆகும்.அதனுடைய சிறப்பு என்பது அது தொக்குத்தளிக்கும் தகவல்ளாலோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியும் உள்க யுத்தம் பற்றியும் அளிக்கும் சரியான விளக்கத்தாலோ அல்ல.இருபதாம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதிக்கான புரட்சிக்கர மாற்றுத்திட்டத்தை அளித்தத்தின் மூலம் மார்கசியத்தை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான உறுதியான வடிவமைப்பை அளித்திருந்தால் இந்நோல் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ரூ.140/-

உணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்

ஏ.பாக்கியம் உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்ட1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலக மக்கள் இதுவாரி சந்தித்தது இல்லை. 2005முதல் உணவு தனியங்களின் விலை75சதவீதம் உயரிந்திருந்தாலும்,அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை150சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள்2008-ஆம் ஆண்டு மட்டும்12.5கோடி மக்கள் தள்ளப்படடனர். 2007இல்84.8கோடியாக இருந்த பட்டினியளர்கள்2008-இல்92.3கோடியாக உயர்ந்தனர்.மேலும்100கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால்(undernurised people)பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவு உலகில் உணவுக்கான மோதல்கள்(Food wars)தீவிரமடைந்துள்ளன ரூ.10/-

இடதுசாரிகளும் புதிய உலகமும்

தமிழில்:அசோகன்முத்துசாமி புதிய தாராளமய உலகமாய யுகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை சர்வதேசமய மாக்கப்ப்பட்டுவிட்டது.நுகர்வோர் பயன்படுத்தத் தயாராண ஒரு பொருளின் பாகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கேற்றர் போல் முலதனம் எங்கு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் போகிறது;வருகிறது.இப்போது முதலாளித்துவம் உண்மையில் கடும் நெருக்கடியில் சீக்ககிக் கொன்டுருக்கும் போதும் அது எப்பிடி தானை தக்கவைத்து கொன்டுருகிறது என்கிற கேள்வியை எழுப்பி;விடைகளையும் முன்வைக்கிறார்.முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அதன் சுரண்டளையும்,அது உபரி மதிப்பை எப்பிடி அபகாரிக்கிறது என்பதையும் மார்க்கஸ் விரிவாக ஆராய்ந்தது போல,புதிய தாராளமய உலகமயம் பற்றிய ஒரு விரிவான,முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது என்கிறார் மார்த்தா ரூ.110/-

தெற்கும் வாழ்கிறது

தமிழில்:ஞாலன் சுப்பிரமணியன் நீ உரைத்த பொய்கள் ஏராளம்,உலகினைப் பற்றி என்னைப் பற்றி விளைவாக,என்னைப்பற்றிய படிமம் நீ திணித்த படிமம்:உன் சொற்களில்’வளர்ச்சி குன்றிய’ ‘திறன் குன்றிய..’அந்தப் படிவத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்…அது பொய்.இப்பொழுது,உன்னைத் தெரிந்து கொண்டேன்.பழைய புற்றுநோய் நீ.என்னையும் தெரிந்து கொண்டேன்!ஒரு நாள்,என் வெறும் கைமூட்டும் போதும் உன் உலகத்தைத் தூளாக்க எனவும் புரிந்து கொண்டேன்! ரூ.50/-

ஸ்தாபானத்தை பற்றி

ஸ்டாலின் வெற்றி தானாக வருவதிலை.அதை அடையவேண்டும்.சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபான வேலையை வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம்.வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள்.இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில் தான் உண்மையாக ஊழியர்கள் உருவாகிரார்கள்.ஒரு சரியான அரசியல் கொள்கை செழிய படுத்த அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும்,அதை செழியப்படுத்தத் தயாராய் உள்ள,அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய அதைச் பாதுகாத்து அதற்க்காக போரிடக்க்கூடியஊழியர்கள் வேண்டும். ரூ.15/-

புரட்சி இயக்கதின் தத்துவார்த வளர்ச்சி

சிவசர்மா இந்திய தேசம்முழுவதும் கொதித்தெழுந்து.விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனுசீலன் சமிதி.யுகந்தார் குழு,கத்தார் இயக்கம்,இந்துஸ்தன் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியசன்(HSRA),சிட்ட்காங் போராளிகளின் இயக்கம் போன்றவை இளைஞர் கூட்டத்தால் வழிநடத்தப்பட்டவை. ரூ.20/-

இளம் தோழர்களுக்கு

லெனின்-பகத்சிங் மார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்தான் அடிபடியில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியூர்த்துக்கிறார். ரூ.20/-

தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

ச. தமிழ்ச் செல்வன் 1940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு. ரூ.10/-

தலைமை தாங்கும் வழிமுறைகள்

மாசேதுங் உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட தோழர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.நாம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்தினைத்திருக்கின்றோம்.நமது வேலைகளில் ஒரே கருத்துக் கொண்டவர்களுடன் கூட,ஒன்றுபட்டு வேலை செய்வதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நம்மில் சிலர் மிகக் கடுமையான தவறுகள் செய்தவர்கள்,அவர்களின்பால் நம்மிடம் குரோதமான பார்வை இருக்கக்கூடாது.அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். ரூ.15/-

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு

வே. மீனாட்சிசுந்தரம் அந்நிய முதலீடுதான் நவீன பொருளாதாரத்தின் அச்சாணி என்ற மூட நம்பிக்கையால் இந்திய தத்தளிப்பது வெளிப்படை.பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர் இந்தியாவிற்குள் வருகிறது என்று கூறுகிறர்கள்.அதனால் வேளையில்லா திண்டாட்டம் போகவில்லை.மின்பஞ்சம் போகவில்லை.நீர்பஞ்சம் போகவில்லை.வறுமை சூருங்கவில்லை.பொருட்களின் விலையும் மலிவாகவில்லை.இந்தியாவில் எந்த தொழிலும் விவசாயமும் லாபமிட்ம் தொழிலாக இல்லை.உழைப்பாவர்களின் வாழ்வும் மேம்படவில்லை.விவசயியோ,தொழிலாளியோ,சில்லறை வர்த்தகரோ,சிறு தொழில் முனிவோரோ இருப்பதை காப்பாற்றும் பயத்தில் வாழ்வதை காண்கிறோம் ரூ.30/-