நான் ஏன் என் தந்தையை போல் இல்லை

ஆயிஷா இரா.நடராசன் ஆயிஷா.இரா.நடராசன் அவர்கள் மரபணுவியலையும் மானுடப் பரம்பரைப் பண்புகள் குறித்தும் எழுதியுள்ள புதிய நூல்.அறிவியல் வரலாறு,அறிவியல் கோட்பாடுகள்,மூலக்கூறு வேதியியல்,பெண்ணியம்,இயற்கைத் தெரிவு மரபணுவியல் என பல்வேறு மானுட அறிவுப்புலச் செய்திகளும்,அவரின் வழக்கமான மெல்லிய நகைச்சுவைத் தமிழும் ஊடும் பாவுமாக ஓடி நெய்து வந்துள்ள படைப்பு. ரூ.40/- இந்தப் புத்தகத்தை உடனே பெற   

வாங்க அறிவியல் பேசலாம்

ஆயிஷா இரா.நடராசன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்,ரிச்சர்டு டாக்கின்ஸ்,பில் பிரைசன்,பீட்டர் ஹிக்ஸ்,சர்.சி.வி.ராமன்,மேரி கியூரி,கார்ல் சாகன்,நோம் சாம்ஸ்கி போன்ற அறிவியல் துறையின் முன்னணி ஆளுமைகள் அறிவியல் குறித்தும்,அறிவியல் கல்வி குறித்தும் சமூகம் குறித்தும் கொண்டுள்ள உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ள வேண்டுமா?மகத்தான இந்த உள்ளங்களோடு சிறிது நேரம் உரையாட வேண்டுமா?ஆயிஷா இரா.நடராசனின் மந்திரப் பேனா உங்களுக்கு இதனை சாத்தியம் ஆக்குகிறது. ரூ.80/-

சார்லஸ் டார்வின்(நாடகம்)

ஆயிஷா இரா.நடராசன் “மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர்.ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்-தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண¢டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்க்ளுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார்.டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம் திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “ டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை.மனித எண்ணத்திலே ஒரு புரட்சியை உண்டுபண்னி விட்டார்.அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்“ என்று பொருத்தமான வர¤களுடன் புத்தகம் முடிகிறது.குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண¢டிய புத்தகம். “ ரூ.25/-

அணு ஆற்றல்

ப.கு.ராஜன் அணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல். ரூ.30/-

விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை

ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன. ரூ.40/-