புலப்படாத நகரங்கள்

இடாலோ கால்வினோ தமிழில் : சா. தேவதாஸ் மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels”. ரூ.100/-

பாடும் பறவையின் மௌனம்

ஹார்ப்பர் லீ தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் 1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அலபாமா நகரத்தில் 30களில் வழக்கத்தில் இருந்த இன பிரிவினையை ஆறு வயது குழந்தையின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார். ரூ.360/-

பட்ட விரட்டி

காலித் ஹுசைனி தமிழில்: யூசுப் ராஜா ‘பட்ட விரட்டி’ என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ரூ.250/-

ஹாருகி முரகாமி

ஹாருகி முரகாமி தமிழில்:க.சுப்பிரமணியன் இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது. ரூ.350/-

நிழலற்ற பெருவெளி

தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில் எஸ்.அர்ஷியா மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது. ரூ.200/-

நள்ளிரவின் குழந்தைகள்

சல்மான் ருஷ்தீ தமிழில்: பூர்ணச்சந்திரன்   1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாளிணிந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. ரூ.550/-

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம். ரூ.220/-

தமுரு

பாப்லோ அறிவுக்குயில் இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது. ரூ.220/-

டாவின்சி கோட்

டான் பிரவுன் தமிழில் : பெரு முருகன் இரா.செந்தில் சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின் இது ஒரு  முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். நெல்ஸன் டெமில் திரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. தி டென்வர் போஸ்ட் ரூ.499/-

ஜின்னாவின் டைரி

கீரனுர் ஜாகிர் ராஜா “ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை. ரூ.150/-