நீலம்

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது. – ஜெயமோகன் ரூ.250/-

அவன் ஆனது

‘அவன் ஆனது’ நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சா. கந்தசாமிக்கு முன்னுரையும் வேண்டாம்; மதிப்புரையும் வேண்டாம். அவர் பெயர் போட்டிருந்தால் உடனே அதைப் படிக்கக் கிடைத்த பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவர் மேதைமை, நேர்த்தியைத் தவிர வேறெதையும் தந்ததும் கிடையாது; ஏற்றதும் கிடையாது. – ஞானக்கூத்தன் ரூ.170/-

ஆட்கொல்லி

க.நா.சு.   ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்-காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வார-வாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது-. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதி-யாவது அவர் காரணமாக வந்தவைதான். இள-வயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான். ரூ.70/-

1984

ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார். ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: க.நா.சு ரூ.210/-

தக்கையின் மீது நான்கு கண்கள்

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். – சா.கந்தசாமி ரூ.100/-

ஜெயமோகன் குறுநாவல்கள்

நான் குறுநாவல் வடிவங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். விதியின் சுழற்பாதையைச் சொன்ன பத்மவியூகமும் ஆழத்திலிருந்து நெளியும் இச்சையின் விஷப்பரப்பைச் சொன்ன இறுதிவிஷமும் என் நினைவில் மீண்டும் மீண்டும் வரும் ஆக்கங்கள். ரூ.280/-

வாழ்ந்தவர் கெட்டால்

தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. – க.நா.சுப்ரமணியம் ரூ.60/-

அவதூதர்

‘அவதூதர்’ நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்-பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்தி-லிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்-கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக் கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன். ரூ.180/-

பித்தப் பூ

மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்-தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. ரூ.70/-

அவரவர் பாடு

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.   ரூ.80/-