நாயக்கர் காலம் (வரலாறும் இலக்கியமும்)

அ. ராமசாமி வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்டின. அதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளும், வாய்மொழிக் குறிப்புகளின் தொகுப்புகளும் முக்கியமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக இருக்க முடியும் என்பதை ஒத்துக்கொண்டு பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்தகைய ஆய்வுகள் ஒரு தேசத்தின் சமுதாய வரலாற்றை முழுமையாக்கப் பயன்படும். உலகநாடுகளின் இப்பொதுப் போக்கிலிருந்து தமிழ் விலகிச் செல்லவில்லை. கல்விப்புல ஆய்வு முறையியலின் அடிப்படையான கூறுகளை கலை இலக்கியத் திறனாய்வுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் பேரா.அ.ராமசாமியின் இந்த நூல் அத்தகையதொரு ஆய்வு நூலே. தமிழக வரலாற்றில் அதிகம் ஆய்வு செய்யப்படாத நாயக்கர்களின் காலத்தை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை முதன்மையான சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழகச் சமுதாய வரலாற்றை முழுமையாக்குவதற்குப் பயன்படும் பல முடிவுகளை முன் வைத்துள்ளது. ரூ.130/-

இந்தியா எனும் ஐதீகம்

வாஸந்தி கேலி, கண்டனம், சீற்றம், நெகிழ்ச்சி என வாஸந்தியின் மொழி மெழுகுத்தன்மை கொண்டது. வாசகனுடன் அணுக்கமாக உரையாடுவது. அரசியல், பண்பாட்டு, இலக்கியம் என பலதரப்பட்ட தளங்களுள் பயணிக்கிற கட்டுரைகள் இவை. தயக்கமின்றி வெளிப்படுத்தப்படும் வாஸந்தியின் கருத்துக்கள் சார்பு நிலை அற்ற நேர்மையை கொண்டவை. ரூ.75/-

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்

வாஸந்தி மாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்லைகள் கடந்த புரிதலை வலியுறுத்துகிறது. மேலும் வாஸந்தியின் குரல் அறிவுஜீவியின் எந்த பாவனைகளும் அற்றது; அறவுணர்வை தன் ஆதார ஊக்கமாக கொண்டது. தமிழ்ப்பரப்பை இந்த வெளிச்சமேறிய சிந்தனைகள் விகாசமாக்குகின்றன ரூ.90/-

மனதின் புதிர்ப் பாதைகள்

டாக்டர்.P.ஆனந்தன் மனம் என்பது ஒரு உடலியல் இயக்கம் (Physiological Process) என்ற தகவல் உட்பட நவீன உளவியல் பற்றிய அறிவியல்பூர்வமான உண்மைகளை எளியமையாக விளக்கியுள்ளார் டாக்டர்.P. ஆனந்தன். மனநோய்களுக்கு மருந்துகள் எப்படி பயன்படுகின்றன என்பதையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி போலி மருத்துவர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்போது வெளிப்படும் கோபம் உளவியல் பற்றி மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை வெளிச்சம் கோட்டுக் காட்டுகிறது. ரூ.90/-

பூட்டிய அறைகளில் கேட்ட குரல்கள்

டாக்டர்.P.ஆனந்தன் மனநோய்கள் என்பவை ‘பைத்தியம்’ என்ற முத்திரையுடன் வித்தியாசமாக நடந்து கொள்பவர்களைக் குறிப்பதாக நினைக்கும் சமூக இழிவை (stigma) தகர்க்கும் விதமாகவும் அவை அன்றாடம்ட நம்மிடையே புழங்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் பொதுவான நோய்கள் என்பதை விளக்கும் விதமாகவும் டாக்டர்.P. ஆனந்தன் எளிய நடையில் நாற்பதுக்கும் அதிகமான பதிவுகள் (case-history) மூலம் விளக்கியிருக்கிறார். ரூ.100/-

புத்தனின் பெயரால்

யமுனா ராஜேந்திரன் முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்களையும் நேசத்தையும், வெறுப்பையும் துயர்களையும் புரிந்து கொள்ள முனைந்ததாகவே எனது திரைப்பயணம்ட இருந்தது. வரலாற்று நூல்களின் வழி நான் வந்து அடைந்த புரிதலை விடவும் ஆழமான புரிதலை இந்தத் திரைப்படங்கள் எனக்கு அளித்தன என்பதனை நான் நிச்சயமாகவே சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளாக நான் தேடித் தேடிப் பார்த்து வந்திருக்கிற அந்த வரலாற்றின் சாட்சியங்கள் வெறும் நினைவுகளாக அழிந்துபோய்விட விட்டுவிட எனக்குச் சம்மதமில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விளைவாக அந்த மக்கள் எதிர்கொண்ட துயர்களின் சாட்சியங்களையும் திரைப்படப் பிம்பங்களின் வழி இங்கு நான் பதிந்திருக்கிறேன். முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தில் மரணமுற்ற வெகு மக்களுக்கும் போராளிகளுக்கும் என் வரையிலான ஆத்மார்த்தமான நினைவுகூரல் இந்தப் பதிவுகள். அவர்தம் நினைவுகளின் சாட்சியமாக இது நின்று வாழும் என நம்புகிறேன். யமுனா ராஜேந்திரன் ரூ.140/-

பாப்லோ நெரூதாவின் துரோகம்

  யமுனா ராஜேந்திரன் யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளைவே இந்த எழுத்துக்கள். சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த வேளையில், பாசிசத்தை ஸ்டாலினியத்துடன் சமப்படுத்தி வரலாறு முழுக்கவுமான மார்க்சியர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் களங்கப்படுத்தப்பட்ட வேளையில், வரலாறு குறித்த மௌனங்களையும் ஞாபக மறதிகளின் இருண்ட வெளிகளையும் உடைக்கும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகளும் பாசிசத்திற்கு எதிரான நிலைப்பாடு மேற்கொண்ட, மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள், சமவேளையில் ஸ்டாலினியம் குறித்துச் சிக்கலான அறவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் எனும் வரலாற்றுப் புரிதலுடன் அத்தகைய கலைஞர்களின் சுயவிசாரணைகளையும் ஆன்ம தரிசனத்தையும் முன்வைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளும் பாலியல் மீறல்களை முன்வைத்து மார்க்சியர்களின் வாழ்வும் அவர்தம் தத்துவப் பங்களிப்பும் மலினப்படுத்தப்பட்ட வேளையில், அடிப்படையில் மனிதஜீவிகளாக அவர்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. பாசிசம் குறித்த மௌனமும் ஞாபகமறதிகளும் பற்றியதாகத் துவங்கி, பிரெஞ்சுத் தத்துவவாதி ழாக் தெரிதாவுக்கான அஞ்சலியில் முடிவுறும் யமுனா ராஜேந்திரனின் இந்நூல், ஒரு வகையில் சென்ற நூற்றாண்டின் மகத்தான கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவு கூரலாகவே உருவாகி இருக்கிறது ரூ.125/-

நினைவுகளுக்கு மரணமில்லை

மி.ராஜீ கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவருடைய முதல் நூலே ராஜுவின் சிந்தனை ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவருடைய நடையில் தெளிவு இருக்கிறது. இயல்பான ஓட்டம் இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி (முன்னுரையிலிருந்து) ரூ.65/-

பெருஞ்சுவருக்குப் பின்னே

ஜெயந்தி சங்கர் சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் குறித்து ஜெயந்தி சங்கர் எழுதியுள்ள இந்நூல் சரித்திரத்தின் இருள்படிந்த பாதைகளில் துயரத்தின் சித்திரமாக அலைந்து கொண்டிருக்கும் பெண்களின் சுவடுகளைப் பதிவு செய்கிறது. காலகாலமாக உலக வரலாற்றில் பெண்கள் மேல் இழைக்கப்படும் பண்பாட்டுக் குற்றங்களை சீனப்பெண்களின் வாழ்வின் வழியே தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறார். ரூ.120/-

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்

ஆர். அபிலாஷ் நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ரூ.80/-