நவீன அரபு இலக்கியம்

எச்.பீர்முகமது பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ரூ.120/-

தலித் அரசியல்

ஆசிரியர்: அ.மார்க்ஸ் தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது. ரூ.200/-

தமிழி​சை ​வேர்கள்

ஆசிரியர்: நா.மம்மது நமது வரலாறு என்பது ஆவண சான்றுகளின் வழி தெளிவு குறைந்த ஒன்றுதான். ஆனால் தொன்மை குறைவானது அன்று அய்யாயிரம் ஆண்டு பழமை உடைய இசைத்தமிழுக்கும் முழுமையான வரலாறு இதுவரை இல்லை. அழிந்தது போக, அழித்தது போக, எரிந்தது போக, எரித்தது போக, மறைந்தது போக, மறைத்தது போக, தமிழைச் செள்திகளைத் தாங்கி நிற்கும் இசைச் செல்வம், இன்றும் கிடைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் மலைபோல் குவிந்துள்ளது. ரூ.100/-

சோளகர் : வாழ்வும் பண்பாடும்

பகத்சிங் தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. ரூ.50/-

சொல்லித் தீராதது

ம. மணிமாறன் மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவரைப் போன்ற தீவிரப் படிப்பாளிகள் தமிழுக்குத் தேவைப்படுகிறார்கள். வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் கருத்துக்களை முன்னிறுத்துவதாலும் இவர்களிப் போன்றவர்களின் முக்கியத்துவம் அதிகமாகிறது. சொல்லித் தீராதது நூலில் மணிமாறன் புத்தகங்களை அணுகியிருக்கிற விதம் நுட்பமானது. படைபாளியின் ஆன்மாவோடு நெருங்கத் தெரிந்த வாசகனையும், விமர்சகனைக் கடந்த அவதானிப்பாளனையும் இவருள் காண்கிறேன். ரூ.175/-

சுய விமர்சனம்

கீரனூர் ஜாகிர்ராஜா ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது. ரூ.120/-

சி​றைப்பட்ட கற்ப​னை

ஆசிரியர்: வரவர ராவ் வரவர ராவ் பிரபலமான தெலுங்கு கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவிதைகள் இந்தியாவின் பலமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்போது மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்கேற்றவர். ரூ.150/-

சித்திரம் பேசேல்

மீனா தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை வரித்துக்கொண்ட மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘ஊடகக் கவனிப்பு’ (Media Watch) எனும் திசையில் உருவாகியுள்ள சில காத்திரமான கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு. அரசியலும் அழகியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என நிறுவுகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். ரூ.215/-

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

  கவின் மலர் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒருபெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?கல்விமுறை மட்டுமல்ல, நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி & மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளுமானால், சிறு வயதிலேயே சாதி என்பது உயிர்கொல்லி என்கிற கருத்தை பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனி வரும் தலைமுறையிலாவது சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக நிகழும் கௌரவக்கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று நம்பலாம். ரூ.150/-

சாத்தானை முத்தமிடும் கடவுள் Category: Articles.

சாத்தானை முத்தமிடும் கடவுள் ஜி . கார்ல் மார்க்ஸ் கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological  (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார். அவற்றை விமர்சிக்கிறார். மறுக்கிறார். அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘சமூக ஊடகங்களின் மனச்சாட்சியாகவும்’ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார். ரூ.180/-