சாப்ளினுடன் பேசுங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன ரூ.140/-

கலிலியோ மண்டியிடவில்லை

எஸ். ராமகிருஷ்ணன் அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.85/-

பிகாசோவின் கோடுகள்

எஸ். ராமகிருஷ்ணன் நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியங்களைக் கண்டுவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் தேடுதலின் வெளிப்பாடே இக்கட்டுரைகள். நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயிற்சியும் ரசனையும் தொடர்ந்த ஈடுபாடும் தேவை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. ரூ.90/-

இசை திரை வாழ்க்கை

ஷாஜி ஷாஜியின் இந்த நூல் நமது காலத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றியும் மறக்க முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. வரலாற்றை உருவாக்கியவர்களைப் பற்றியும் வரலாற்றில் வாழ்பவர்களைப் பற்றியும் விவரிக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜேஷ்கன்னா, பி.பி.ஸ்ரீநிவாஸ், லோஹிததாஸ், சக் பெர்ரி, ஹரிஹரன், மிஷ்கின் போன்ற கலையுலக பிரபலங்களைப் பற்றிய மிக நுட்பமான பார்வைகளை வெளிப்படுத்தும் அதேசமயம் தோல்நோய் மருத்துவர் தம்பையா, அமுல் நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப புரட்சியாளர் ஸ்டீவ் ஜோப்ஸ் போன்றோரைப் பற்றிய அறியப்படாத சித்திரங்களையும் இந்த நூல் வழங்குகிறது. இசை குறித்த ஆழமான பார்வைகள், சினிமா குறித்த நுட்பமான விமர்சனங்கள், சமூகம்-வாழ்க்கை குறித்த புதிய கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என மிகப் பரந்த தளத்தில் விரியும் இந்த நூல் வாழ்வையும் கலையையும் பற்றிய பல புதிய தரிசனங்களை அளிக்கிறது. ஷாஜியின் தேர்ந்த கவித்துவமான நடையும் கூர்ந்த நோக்கும் இந்த நூலை ஒரு புனைகதையைவிடவும் சுவாரசியமான வாசிப்பின்பத்திற்கு உரியதாக்குகிறது. ரூ.170/-

இனத்துவேசத்தின் எழுச்சி

சேனன் இலங்கையில் 2009 தமிழினஅழித்தொழிப்பிற்குப் பிறகான அரசியல் சூழல்களை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழர் அமைப்புகள் முன்னால் இருக்கக்கூடிய சவால்கள், இலங்கை அரசின் கபட நாடகங்கள், பொதுபல சேனா போன்ற அமைப்புகள் மூலமாக புதிய வடிவம் பெறும் சிங்கள இனவாதம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களின் பரிமாணங்கள் என சேனன் ஈழப் பிரச்சினையின் சமகால சிக்கல்களை மிக நுட்பமாக இந்த நூலி¢ல் பரிசீலிப்பதுடன் இந்தப் போராட்டத்தின் எதிர்கால திசைவழிகள் குறித்தும் தனது பார்வைகளை முன்வைக்கிறார். ரூ.90/-

சோவியத்துக்குப் பிந்தைய உலகம்

அ.மார்க்ஸ் சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய வசந்தம், வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டங்கள், சோவியத்துக்குப் பிந்திய உலகின் மாற்றங்கள், மீண்டும் ஒரு பனிப்போரின் துவக்கம், உலக இடதுசாரி இயக்கங்களின் இன்றைய நிலை, பல ஸ்தீனப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்கள், இந்திய -& சீனப் பிரச்சினையில் நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட உண்மைகள், அண்டை நாடுகளுடனான நம் உறவின் விரிசலின் காரணங்கள் எனச் சமகால உலகைத் தன் கூரிய பார்வையின் ஊடாக அலசுகிறார் அ.மார்க்ஸ். ரூ.130/-

இராணுவமயமாகும் இலங்கை

அ.மார்க்ஸ் 2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களைப் புறக்கணித்து தனது இனவாத ஒடுக்குமுறைகளை பௌத்த- சிங்களப் பேரினவாத அரசு எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை இந்த நூல் ஆழமாக முன்வைக்கிறது. நேரில் சென்று கண்ட அனுபவங்களின் பின்னணியில் இன்றைய இலங்கையைப் பேசும் இக் கட்டுரைகள் ஈழத் தமிழ் இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது கூட்டங்களில் பேசக்கூடாது என அ.மார்க்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரூ70/-

கரையும் நினைவுகள்

அ.மார்க்ஸ் பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற இந்த மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பா வளர்த்த நாய்கள், சினிமா…சினிமா..கரிச்சன்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், அல்லாவின் அருளால் என இந்த நூலில் உள்ள பல கட்டுரைகள் அ.மார்க்ஸின் பரந்துபட்ட பார்வைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. ரூ.115/-

சோலை எனும் வாழிடம்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும்ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு. ரூ.110/-

நிலவில் ஒருவன்

ராஜ்சிவா ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. ரூ.100/-