காலமும் கவிதையும்-தமிழச்சியின் படைப்புலகம்

தமிழச்சி தங்கபாண்டியன் தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்கிறது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கௌரவம் அல்ல, அவரது கவிதைக்கு – தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கௌரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணயமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று, கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காகவே என்பதை ‘காலமும் கவிதையும்’ நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும். ரூ.150/-

பிறவழிப் பயணம்

  ரவிக்குமார் ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நானாவதி கமிஷன் என நம்முடைய காலத்தின் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களையும் அவற்றிற்குப் பின்னே இருக்கும் கலாச்சார – அரசியல் பிரச்சினைகளையும் முன்வைக்கும் ரவிக்குமார் தமிழ் இதழியல் வரலாற்றில் தலித்துகளின் இடத்தையும் மொழிப்போர் வரலாற்றில் பிற்படுத்தப்பாட்டோர் பங்கேற்பையும் புதிய வெளிச்சத்தில் ஆராய்கிறார். ரூ.90/-

பாம்படம்

தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நகரமாக இருப்பவை நேற்றைய கிராமங்களே. மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும் நாம் தீண்டாதவையாக மாற்றி வைத்திருக்கிறோம். நகரம் அதற்குரிய இயல்பில் இருக்கிறது. கிராமம் அதற்குரிய ஒழுங்கில் இருக்கிறது. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது நோய்க்கூறு கொண்ட மனங்களின் வெளிப்பாடு. தமிழச்சி, அசலான கிராமத்து மனிதர்களையும், நகரத்து மனிதர்களையும் காட்டுகிறார். கிராமத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்புப் பெயர் இருக்கும். சிறப்புப் பெயர்கள் ஒரு கதையை, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இருக்கும். தமிழச்சி இடத்தைவிட, மனிதர்களைவிட, இடத்திற்கும், மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் கதையை, வரலாற்றை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ், தமிழர்கள், தமிழ் அடையாளம் குறித்த தெளிவை நாம் ‘பாம்பட’த்தின் வழியே அறியலாம். நிலவியல் சார்ந்த விழுமியங்கள்தான் கலாச்சாரம், பண்பாடு என்பது மட்டுமல்ல – நாம் என்பதும். நம்முடைய நிலவியல் சார்ந்த வாழ்வை உற்று நோக்கக் கோருகிறது ‘பாம்படம்’. ரூ.70/-

சொல் தொடும் தூரம்

தமிழச்சி தங்கபாண்டியன் நான், இக்கட்டுரைகளை விமர்சகராக வேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாததன் காரணமாக அழிந்து போயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால் கவனப்படுத்த வேண்டியதைக் கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ள வேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன். தமிழச்சி தங்கபாண்டியன் ரூ.85/-

பண்படுதல்:பண்பாட்டு விவாதங்கள்

ஜெயமோகன் நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் Ôசாப்பிட்டாச்சா?Õ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது? நம் பண்பாட்டின் ஆழத்தில் அதற்கான விடை இருக்கலாம். அந்த ஆழத்தை தேடிச்செல்லும் கட்டுரைகளும் விவாதங்களும் அடங்கியது இந்த நூல். பண்பாடென்பதே ஒரு விவாதம் என்பதனால் பேசும்தோறும் நாம் பண்பாட்டை உருவாக்குகிறோம். இந்நூல் பண்பாட்டுப்பிரச்சினைகளை, பண்பாடு என்னும் பிரச்சினையை பல கோணங்களில் விவாதிக்கிறது. நம்முடைய நீண்ட மரபின் பின்னணியிலும் இன்றைய நவீன யுகத்தின் பின்னணியிலும் இந்நூல் தன் ஆய்வுகளை விரித்துக்கொள்கிறது ரூ.160/-

கோடுகள் இல்லாத வரைபடம்

எஸ். ராமகிருஷ்ணன் திசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள். ரூ.60/-

மேற்குச்சாளரம்:சில இலக்கிய நூல்கள்

ஜெயமோகன் இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது ரூ.75/-

ஆள்வதன் அரசியல்

ரவிக்குமார் இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார். ரூ.90/-

மலைகள் சப்தமிடுவதில்லை

எஸ். ராமகிருஷ்ணன் எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள். ஆச்சரியங்கள், அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன. ரூ.160/-

ரெண்டாம் ஆட்டம்

சாரு நிவேதிதா பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் அகஸ்தோ போவாலின் ‘கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன்னெப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை. ரூ.60/-