அரசும் புரட்சியும்

லெனின் புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.” ரூ.90/-

பட்டியல் சாதிகள் பழங்குடிகள் அரசு

ஆனந்த் டெல்டும்டே “மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என அரசமைப்புச்சட்டத்தால் கட்டளையிடப்பட்டுள்ள அரசு,நாளாவட்டத்தில் செய்ததெல்லாம் மக்களுக்குத் தன் கோரைப்பற்களைத் திறந்து காட்டியதுதான்.அவர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கடிக்கிறது;தலித்துகளாக இருந்தால் அவர்களை இன்னும் கூடுதலாகக் கடிக்கின்றது.பட்டியல் சாதிகள்-பட்டியல் பழங்குடிகள் ஆகியோரைப் பாதுகாக்கும் எனக் கருதப்பட்ட அரசு அவர்களைத் துன்புறுத்தும் சக்திகளில் முதன்மையானதாக விளங்குகிறது.” ரூ.30/-

குஜராத் வளர்ச்சியா?வீக்கமா

சா.சுரேஷ் “குஜராத்தில் எல்லாம் இருக்கிறது.ஆம்,குஜராத்தில் ஊழல் இருக்கிறது ஆளுமைத் திறமையின்மை இருக்கிறது.சாதி,மதவெறி இருக்கிறது சமூக ஏற்றத்தாழ்வு இருக்கிறது.சுற்றுச் சூழல் சீர்கேடு இருக்கிறது.மக்கள் சொத்து தனியார் கட்டுப்பாட்டில் இருக்கிறது.பச்சிளங் குழந்தைகளின் சாவு இருக்கிறது.மின்சாரம் இல்லாமலிருக்கிறது.குழந்தைகள் எடைக் குறைவுடன் இருக்கின்றன.பிரசவ மரணம் இருக்கின்றது.கல்லாமை இருக்கின்றது.குறைவான பாலின விகிதம் இருக்கிறது.பொய்யும் புரட்டும் இருக்கிறது.” ரூ.30/-

மீரட் சதி வழக்கு

கி.ரமேஷ் அன்றைக்கு அரும்பியிருந்த பொதுவுடமை இயக்கத்தை முளையிலேயே கிள்ளி அழிக்க ஆங்கில ஏகாதிபத்தியம் முனைந்த மூன்று சதி வழக்குகளில் மூன்றாவது(மற்றவை பெஷாவர்,கான்பூர்)மீரட் சதி வழக்கு.வழக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பதிலாக தொழிலாளர் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்தி ஆதரவு பெருகவே வழிவகுத்தது ஃபிடல் கேஸ்ட்ரோ போல,ஜார்ஜ் டிமிட்ரோவ் போல நெல்சன் மண்டேலா போல அன்றைக்கே இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாக்கிய கதை. ரூ.15/-

நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு

மன்த்லி ரெவ்யூ கட்டுகரைகள் ஐன்ஸ்டீன்,சே குவேரா,பால்.எம்.ஸ்வீஸி,பால் பரான்,லியூ ஹூபர்மன் போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுகரைகள் கொண்ட தொகுப்பு;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்தபோதே எழுதப்பட்டு இன்றைக்கும் இடதுசாரிகள் அனைவரும் வாசிக்கும் அவசியம் உள்ள தொகுப்பு இப்போது நல்ல தமிழில் உங்கள் கையில்…. ரூ.150/-

மண்டேலா ரிவோனியா சதி வழக்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய எழுச்சி உரை

வீ.பா.கணேசன் “ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்சன் மண்டேலா கம்யூனிஸ ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ரிவோனியா சதி வழக்கில் ஆற்றிய வீர உரை தென் ஆப்ரிக்க இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது. “ ரூ.35/-

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

இரா.இயேசுதாஸ் அன்னல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது. ரூ.90/-

இலங்கை: தமிழர் பிரச்சனை ஒரு துயரத்தின் வரலாறு

என்.குணசேகரன் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து தோழர்.குணசேகரன் இளைஞர் முழக்கத்தில் எழுதிய கட்டுரைத் தொடரின் நூல் வடிவம.இன்றைய நிலையில் வரலாற்று ரீதியாகவும்,அறிவியல் பூர்வமாகவும் பிரச்சனையை தீர்ப்பதற்கான திசைவழியையும் சுட்டிக் காட்டுகின்றார். ரூ.50/-

மோடி அரசாங்கம்:வகுப்புவாதத்தின் புதிய அலை

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி “சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ்.தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.” …மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இடதுசாரிகளும்,ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும்,கருத்துகளையும் கொண்ட நூல். ரூ.160/-

பொலிவியா:சேகுவேரா இன்றும் வாழ்கிறார்

டி.லட்சுமணன் சே குவேராவின் எண்ணத்தை ஈடேற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக லத்தீன் அமெரிக்காவில் சாவேஸ்,மெரால்ஸ் திகழ்கிறார்கள்.இந்நூல் பொலிவியாவின் சமீபத்திய அரசியல் மாற்றத்தை விவரிக்கிறது. ரூ.15/-