Working Class & Current Challenges

M.K.Pandhe M.K.Pandhe who sacrified his life time to build and guide the working class movement in india was the president of CITU until his death. In this book, he narrates the history of the working class movement of India including the disunity within it and the necessity of its unity. It analyses the Socio-Economic problems confronting the working class ரூ.90/-

கப்’பஞ்சாயத்து:சாதியின் மற்றொரு கோரமுகம்

அசோகன் முத்துசாமி கட்டப் பஞ்சாயத்து தானே தெரியும் நமக்கு?அது என்ன’கப்’பஞ்சாயத்து?இங்கல்ல,ஹரியாணா,பஞ்சாப்,உ.பி,போன்ற வட மாநிலங்களில் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வரும்’கப்’பஞ்சாயத்துகள் சாதியத்தின் துருப்பிடித்த ஆயுதமேந்தி நிகழ்த்துகின்ற கோரச் செயல்களையும்,காதல் திருமணம் செய்து கொள்ளவோ,திருமணத்தின் மூலமாக சாதியை மறுக்கவோ,தலித்தாகப் பிறந்திருப்பின் உயர்சாதிப் பெண்ணை மணந்து கொள்ளவோ முடியாத ஒரு இருட்டு உலகத்தை இந்நூல் உணர்வுப்பூர்வமான மொழி நடையில் விவரிக்கிறது. ரூ.10/-

ஐக்கிய முன்னணி தந்திரம்

ஏ.நிசார் அகமது ஐக்கிய முன்னணி தந்திரம் என்பது சோசலிசப்புரட்சிக் கான அணிகளை ஒன்றுப்படுத்துவதற்க்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடாகும்.இதனை இந்திய மண்ணின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுத்துகிறது என்பது குறித்தும் இதில் பயணித்தப் பாதை,இன்னும் பயணிக்க வேண்டிய பாதை ஆகியவை குறித்தும் வளமான விபரங்களுடன் ஆழமான ஆய்வுடன் அதே சமயத்தில் எளிமையான நடையில் இந்நூலை நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். ரூ.20/-

காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்

அருணன் பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது.இரட்டை வாக்குரிமைதான் இருத்தி லட்சியம் என அம்பேத்கர் கருத்திருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை என் சேர்க்கவில்லை?இது போன்ற கேள்விகளுக்கு நீதானமான விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம். ரூ.25/-

மார்கசிய பார்வையில் அன்னை தெரசா

ராமசந்திர வைத்தியநாதன் அன்னை தெரசாவைப் பற்றி அவரது சேவைகளைப்பற்றியும் இதுவரை கூறப்படாத ஒரு புதிய கண்னோட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார்,இந்நூலின் ஆசிரியர் ரூ.5/-

மாறும் காட்சிகள்(ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்)

அ.ராமசாமி ரஜினிகாந்த் எண்ணும் நடிகர் திரைப்படத்தில் உலா வரும் பிம்பமாகவும் அப்பிம்பத்திற்காக எழுதப்பட்ட வசனங்களாலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல வகையானவை.மக்ாளாட்சித் தத்துவதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக மாறும் போக்கில் அந்தத் தாக்கங்கள் உண்டாக்கக் கூடிய விளைவுகள் பல தளத்தில் வினையாற்றக் கூடியவை.அவரே நேரடியாக அரசியலுக்கு வரவிட்டாலும் அவரது தாக்கத்தால் திரட்டப்படும் பெருங்கூட்டம் எத்தகைய தலைமையை அல்லது இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் எனபுரிந்து வைத்துக் கொள்வது நமது காலத்தின் தேவை ரூ.15/-

மாவோயீஸம் இடதுசாரிகளின் விமர்சனம்

தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி இக்கட்டுரையில் இடது குறுங்குழுவாதம் குறித்து காத்திரமாக விவாததிக்கின்றன.இந்தியாவின் சி.பி.ஐ?(மாவோயீஸ்ட்)மற்றும் இடதுசாரி சாகசங்களின் சர்வதேச அனுபவங்களைப் பற்றியும் இந்திய மாவோயீஸ்துகளின் செயல் திட்டத்தை தத்துவர்த்த ரீதியான விமர்சனத்திருக்கு உட்படுத்துக்கிறது. ரூ.80/-