கழகங்களால் கைவிடபட்ட மக்கள் நல்வாழ்வு

டாக்டர். எஸ்.காசி நல்வாழ்வு வணிகமயமாக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் லாபம் தேடும் தொழிலாக மாற்றப்பட்டிருகிறது… கார்ப்பரேட் மருத்துவமனையில் முதலிடிற்கான லாபத்தைத் த்தும் பொழுது அது நோயுறா நிலையை ஒரு போதும் ஆதரிக்காது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அது ஒரு போதும் விரும்பாது. அது நோயாளிச் சந்தையை வளர்க்கும் நடவடிக்கையை அது மேற்கொள்ளும்… அம்மா காப்பிட்டு நிறுவங்களுக்கு கொடுத்த ரூ.750 கோடியை பயன்படுத்தி 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும்… ரூ.5/-

சமையல் வாயு அம்பானிகளின் சூதும் அதிமுக, திமுக-வின் பாராமுகமும்

எல். விஜயன் அம்பானி,அதானி, மல்லையாகளுக்கு வாரி வழங்கும் பாஜக, காங்கிரஸ் அரசுகள் சமையல்வாயு மானியத்தை வெட்டி சாதாரண மக்களின் தலையில் சுமையை ஏற்றுகின்றன . அதிமுக,திமுக கட்சிகள் பாராமுகமாய் சமையல்வாயு விலையேற்றத்தின் உண்மைக் கதையை வாசியுங்கள். ரூ.10/-

வேளாண் சமூகத்தை புறக்கணித்த திமுக-அதிமுக

பெ. சண்முகம் ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதி என்ற ஆள்மாற்றத்திற்கு பதிலாக மாற்றுக் கொள்ளையுடனான ஆட்சிமாற்றம் என்பதுதான் உண்மையில் மாற்றம் ஏற்பட வழிபிறக்கும்.அதற்கொரு வாய்பளிக்க வேண்டாமா? இந்த முறை மாற்றித்தான் வாக்களித்துப் பார்ப்போமே! ரூ.10/-

வழிப்பறி சுங்கச் சாவடிகளும்… தடுக்க வக்கற்ற அரசுகளும்…

எம். கண்ணன் சிறிய வாகனத்திற்கு ரூ.35ம் ,நடுத்தரம் ரூ.70ம் பேருந்து லாரி ரூ.110ம் ,பெரிய சரக்கு வாகனத்திற்கு ரூ.210ம் வசூலிக்கபடுகிறது. நாம் தோரயமாக ஒரு வாகனத்திற்கு ரூ.70 என கணகிட்டால் 90,000*70=63,00,000 ஒரு நாள் வசூல் 63,00,000*30=18,90,00,000 ஒரு மாத வசூல் 18,90,00,000*12=226,80,00,000 ஒரு வருட வசூல் 226,80,00,0008*10=226800,00,000 பத்துவருட வசூல் வெறும் 80 கோடியை முதலிடு செய்துவிட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்தது 2268 கோடிகள். ஒரு டோலில் இவ்வளவு கோடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது. ரூ.5/-

இணைய வழி வர்த்தகம்; சில்லரை வர்த்தகத்திற்கு சவக்குழி

எம். கண்ணன் சில்லரை வர்த்தகத்தை நம்பி தமிழகத்தில் 30 லட்சம் பேரும், இந்தியா முழுவதும் 5 கோடி பேரும் உள்ளனர். அதே போல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லரை வர்த்தகத்தின் பங்கு 22 சதவிகதமாக இருந்து வருகிறது. உற்பத்தி வெளிநாடு, நுகர்வு இந்தியா என்ற நிலை ஏற்பட்டால் , அது ஒரு வழிப்பாதையாக மாறி இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் சிக்கலுக்குள்ளாகும். ரூ.5/-

அதிமுக+திமுக=மின்வெட்டு

கே. விஜயன் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்துவோம். மின்கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். மத்திய அரசின் தவறான மின் கொள்கையை மாற்றுவோம். தட்டிக்கேட்காத திமுக ,அதிமுக கட்சிகளையும் புறகணிப்போம். ரூ.5/-

திமுக – அதிமுக : கிரானைட் மலையை விழுங்கியவர்வள்

ஜி. ராமகிருஷ்ணன் உண்மையில் 15 க்கும் அதிகமான இதில் தொடர்பு பெற்றுள்ளன. மூன்று நிறுவனங்களை மட்டும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பட்டிருப்பது ஏன்? கிட்டத்தட்ட 1 லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு…. 2009 ஆம் ஆண்டே பத்திரிகைகளில் கிரானைட் கொள்கைகள் குறித்த செய்திகள் வெளியாகின. முதலமைச்சர் கருணாநிதியிடம் இது பற்றி புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை….. தமிழகத்தில் நடைபெற்றுள்ள மிகப் பிரமாண்டமான கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை மற்றும் ஆற்று மணல் கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர் என்பது வெளிப்படை திமுக அதிமுக அல்லாத ஆட்சி அமைந்தால்தான் இந்த முறைகேட்டின் முழுப் பரிமாணமும் வெளிவரும். தவறிழைத்தவர்களை சட்டபடி தண்டிக்கவும் முடியும் ரூ.5/-

அமெரிக்க மாமாவின் அணுக்குடில்

எம்.கே.பத்ரகுமார் இந்திய-அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது,இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இது இந்திய வளர்ச்சியோடு பிர்கிய முடியாது என்கிறார்கள்.எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும்,நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும்,அதைவிட இந்த உடன்பாட்டால் அணுசக்தி தொழில்நுட்பத்துறையில்,நமது சுயசார்புக் கொள்கை மூலம் இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றம் கூட உண்மையில் பாதிப்படையும் என்று சரியாக வாதிடுவார்கள்.குறிப்பாக,நமது சொந்த முயற்சியில் வளர்த்துக்கொண்ட நமது அணுசக்தித் தொழில்நுட்பம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெரும் மதிப்பையும்,கவுரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த கவுரவத்தையும் இழந்து விட்டுத்தான் இந்தியா-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்தப் போகிறோமா? ரூ.50/-

வெல்வதற்கோர் பொன்னுலகம்

பிரகாஷ் காரத் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி150வருடங்களுக்கு மேலாகிவிட்டது.இந்தியாவின் மார்கசிய வல்லுநகர்கள் நால்வர் இந்த அறிக்கையை பற்றி விவரிக்கிறார்கள்.அறிமுகமாக பிரகாஷ் கர்த்தின் கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம் பற்றி அய்ஜாஸ் அகமது கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது பற்றி இர்ஃபான் ஹபீப்பும்,150ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி பிரபாத் பட்நாயக்க் கட்டுரையும் இந்நூலில் உள்ளது. ரூ.80/-