100 கேள்வி – பதில்கள் ஆன்மிகமா? அறிவியலா?

சு.பொ.அகத்தியலிங்கம் எல்லாவற்றுக்கும் அறிவியல் விடை கண்டுவிட்டதா? அறிவியல் பார்வை என்பது சயின்ஸ் பட்டதாரி ஆவதா? நாசா சொன்ன பிறகும் நாத்திகம் பேசலாமா? பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதர் தோன்றுகின்றார்? இப்படி தீக்கதிர் வண்ணக்கதிரில் தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் தொடர்ந்து எழுதி வந்த கேள்வி பதில். ஆன்மிகம் – அறிவியல் குறித்து எப்போதும் எழுப்பப்படும் வினாக்களுக்கு எளிய, அழகிய தமிழில் விளக்கம் அளிக்கிறார். ரூ.125/-  

இந்துத்துவா என்றால் என்ன?

இரா.சிசுபாலன் தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற ‘கடவுள்களை’ வணங்குபவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்றும் தங்கள் மதம் ‘இந்துமதம்’ என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைப் பிடித்துவரும் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை கருப்பண சாமியையோ, முனியப்ப சாமியையோ வழிபடுவர் ‘கிடா வெட்டி பொங்கல் வைப்பர்; ஆனால் ‘இந்துத்துவா’ பேசுபவர்களோ மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சேக்கு படையல் வைப்பவர்கள். அவர்கள் யார், அவர்கள் யாருடைய நலுனுக்காக பணியாற்றுகின்றனர் அவர்களுது மகவெறியன் அடிப்படை என்ன என்பது போன்ற சந்தேகங்களை வினா – விடை வடிவில் எளிய தமிழில் விளக்கும் நூல். ரூ.15/-

Communist Histories volume 1

Vijay Prashad The contemporary world cannot be fully understood without the struggles of the communists over the past century. Rooted in South Asia, Communist. has a global sweep, with essays examining communist praxis from bengal to Maharashtra, from Cuba to China. This volume – the first in a series – looks closely at the Communist international with an emphasis on how the core idea of internationalism impacted the campaigns of Communists. Deeply researched and richly written, these essays are a counterpoint to the erasure of Communist movements in bourgeois historiography. ரூ825/-

மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்

சீத்தாராம் யெச்சூரி மோடியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. தொழிலாளர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்துள்ள யுத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் சீர் குலைவு தலித் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு என்பதையெல்லாம் கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ரூ.50/-

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்

ப.கு.ராஜன் சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்றாக இருந்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. 2009 ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் பரிசளித்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. லத்தீன் அமெரிக்க வரலாறு, அரசியல் போராட்டங்கள் அதன் இலக்கியங்கள் என ஒரு வண்ணமிகு கண்டத்தை ஒரே நூலின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்.’ உலகம் முழுவதும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, முதன்முறையாக ஒரு இந்திய மொழியில் – -தமிழில் வரும் நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’. ரூ.350/-

அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா ஒரு வெற்றிகரமான மக்கள் ஜனநாயக நாடாக மலர்ந்து சோஷலிசத்திற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் எனும் நம்பிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது போராட்டங்களை நடத்திவருகின்றது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்க நாட்டு மக்களை அறைகூவி அழைக்கின்றது. ரூ.5/-

கணக்குப் பார்ப்போம்.. கணக்குத் தீர்ப்போம்

உ.வாசுகி அமைதியான தொழில் சூழல் ஆதரவளங்களை உறுதிபடுத்த அரசின் முதலீடு-தலையீடு- நேர்மையான நடைமுறைகள் ஆகியன உறுதிசெய்யப்படும் சாதாரண மக்களின் உணவுரிமை பாதுகாக்கப்படும், 30 கிலோ விலையில்லா அரிசி அனனைத்து உதவித் தொகைகளும் ரூ.3000 ஆக உயர்வு, எளிய விவசாயத் தொழிலார்க்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர்,கோவில் நிலங்களில் குடியிருபோருக்கும் பட்டா, குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு, குடிசை மக்களின் நகர்வாழும் உரிமை என அடித்தள மக்களின் மனதைத் தொட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டனியின் செயல் திட்டமும், தேர்தல் அறிக்கையும். ரூ.5/-

அன்புமணி தடுப்பூசி ஏமாற்று

டாகடர். பாரதி நீங்கள் (அன்புமணி) பொதுத்துறை நிறுவனங்களை மூடியபின் தடுப்பூசிகளை பல்வேறு தனியார் நிறுவனகளிடமிருந்து அதிக விலையில் வாங்கினிர்களே இதில் உங்களுக்கு என்ன லாபம்? எவ்வளவு லாபம்? இபோதாவது சொல்விர்களா? டாகடர்.அன்புமணி அவர்களே Green Signal Bio Pharamaவின் சுந்தர பரிபுரனதிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் பெயரில் ஒரு தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவதற்காகவே மக்களுக்கு எதிரான குழந்தைகளின் நிறுவனங்களை மூடும் முடிவை எடுத்துள்ளிர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் ? ரூ.5/-

நெறிபிறழ் முதலாளித்துவம் ஊழலின் ஊற்றுக்கண்

எஸ்.விஜயன் 6000 கோடி ரூபாய்களுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் இங்கே 55 பேர். மற்றொரு பக்கம் , நாளொன்றுக்கு இரண்டு டாலர் அதாவது 120 ரூபாய் குட செலவிட முடியாதவர்கள் 85 கோடி பேர்… சலுகைமேல் சலுகையாக எட்டு ஆண்டுகளில் மட்டும் பெரு முதலாளிகள் அரசின் கொள்கை முடிவால் ரூ.31 லட்சம் கோடிக்கு மேல் பலனடைந்திருகிரர்கள் ….. 1995-2003 வரை விஷம் குடித்த விவசாயிகள் 1,28,321, 2004 முதல் 2012 வரை தற்கொலையால் மாண்ட விவசாயிகள் 1,46,373. இரண்டு கூட்டணி ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. இந்த சூழ்நிலையில்தான் மானியங்களை வெட்டுவதற்காக திட்டக்கமிஷன் வறுமைக் கோட்டை மறுநிர்ணயிப்பு செய்திருக்கிறது. நகர்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.29ம் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 23ம் செலவழித்தால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேலே சென்றுவிடுவான். ரூ.5/-