என் பயணம்

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. இத்தொகுப்பு ஏதாவது ஒரு வகையில் வாசகனுக்கும் என் எழுத்துக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த வேண்டும். இத்தொகுப்பை மட்டுமே காண முடிந்தவர்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளனின் எழுத்துப் பயணம் குறித்து ஒரு கண்ணோட்டம் தரக்கூடுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். – அசோகமித்திரன் ரூ.140/-

பார்வைகள்

உயர்ந்த மதிப்பீடுகளை நாடுபவர்களுக்கு உயர்ந்த கலையும் வசப்படும். இக்கட்டுரைகள் எல்லாமே நல்ல மதிப்பீடுகளை நாடிய படைப்பாளிகள் பற்றியவை. தமிழின் இன்றைய இலக்கிய மேன்மைக்கு இவர்களின் பங்கு கணிசமானது. – அசோகமித்திரன் ரூ.170/-

காலக்கண்ணாடி

‘கணையாழி’ பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு ‘காலக்கண்ணாடி.’ ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை இவை. இத்தொகுப்பில் சில இடங்களில் காணப்படும் ஒரு&வரி அறிவிப்புகள், சில பிரசுரங்களின் முகவரி மற்றும் விலை பற்றிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தைத் தகவல்பூர்வமாக விளக்கக்கூடும் எனச் சேர்க்கப்பட்டவை. என் சிறுகதை, நாவல் முதலியனவும் இத்தகைய முயற்சிகள்தான். என் வரையில் எல்லாமே நான் எழுதிவரும் முடிவுறாத ஒரு நீண்ட படைப்பின் பகுதிகளாகவே தோன்றுகின்றன. – அசோகமித்திரன் ரூ.220/-

சங்கச்சித்திரங்கள்

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது …எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம் …! – ஜெயமோகன் ரூ.200/-

அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

அ. முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. Ôஇன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே. – அ.முத்துலிங்கம் ரூ. 90/-  

நண்பனின் தந்தை

அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற ‘பம்பாய் 1944’, ‘லீவு லெட்டர்’ ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அருமையான படைப்புகள். சிறுகதைகளில் எள்ளல், ஏளனம் இல்லாத நகைச்சுவை அசோகமித்திரனின் பாங்கு. அது இப்போதும் அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. சிறிய தொகுப்பாக இருந்தாலும் மனிதர்களின் இயல்புகளைப் பெருமளவு திறந்து காட்டுகிறது! – அசோகமித்திரன் ரூ.110/-

ஆறுமுகசாமியின் ஆடுகள்

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. இத்தொகுப்பில் சா. கந்தசாமியின் தொடக்க காலக் கதைகளில் ஒன்றான புகழ்பெற்ற ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை முதல் அண்மைக் காலத்துக் கதைகள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. ரூ.220/-  

அந்தக் கதவு மூடப்படுவதில்லை

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும். ரூ.140/-

ரம்பையும் நாச்சியாரும்

கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார். – சா.கந்தசாமி ரூ.100/-

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். – பிரபஞ்சன் ரூ.130/-