என் பெயர் பட்டேல் பை (லைஃப் ஆஃப் பை)

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?” ரூ.299/-

ஆயுத எழுத்து

  சாத்திரி கடந்த 30 வருடங்களாக இலங்கைத்தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் பார்த்த,கேட்ட,அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட முக்கியமான பல விசயங்களை,1983-ம் ஆண்டு காலப் பகுதியை தொடக்கமாக வைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். ரூ.300/-

அந்தோன் சேகவ் குறுநாவல்கள்

சிறுகதைகளும் குறுநாவல்களும் மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே. ரூ.200/-

அதிகாரம்

எஸ்.அர்ஷியா மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான். ஒரு எல்லை வரைவுக்குள் மட்டுமே அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதைத் தெரிந்தும், ஆபத்தான அதை விரிவுபடுத்த முனையும் அவன் பேராசை இலக்கற்றதாக இருக்கிறது. இதில் எந்தப்படிநிலையும் விலக்கல்ல. அதிகாரம் சுவைத்துப்பார்த்தவர்களுக்கு போதையானது. போதைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள். ரூ.180/-

அஞ்சல் நிலையம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழில்  : பாலகுமார்  விஜயராமன் அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை  புகோவ்ஸ்கி படைப்புகள் பேசுகின்றன. இவர்  ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அமெரிக்க செய்தித்தாளான “ஓபன் சிட்டி”யில் இழிந்த கிழவனின் குறிப்புகள் என்ற பெயரில் பத்தி எழுதியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. அவருக்கென தனி கோப்பு தயாரித்து கண்காணித்து வந்தது. 1986ம் ஆண்டு “டைம்” பத்திரிக்கை புகோவ்ஸ்கியை ”அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக்கவிஞர்” என்று புகழாரம் சூட்டியது. இப்புதினம் புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே கருதப்படுகின்றது. ழீன் பால் சார்த்தர் இவரை அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் என புகழ்ந்துள்ளார். ரூ.200/-

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா. மு. கோமு வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்! ரூ.110/-

உலக மக்கள் வரலாறு

ஹரிஸ் ஹார்மன் தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் மனித சமூகத்தின் வரலாற்றை வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சொல்லும் சுவையான நூல். ரூ.1100

வர்ளக் கெட்டு

வறீதையா  கான்ஸ்தந்தின் கடலை எழுதுதல்… கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம். கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இனம் புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை என்கிறது வறீதையாவின் பதிவு. ரூ.130/-

வருவதற்கு முன்பிருந்த வெயில்

  ஜி . கார்ல் மார்க்ஸ் நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் அடிப்படையில் ஒரு வாசகன். அந்த வாசிப்பின் பலத்தில் சொல்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் சர்வதேசத்தரம் வாய்ந்தவையாக உள்ளன. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும். – சாரு நிவேதிதா ரூ.100/-  

மூன்று ஆண்டுகள்

அந்தோன் சேகவ் “மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா  அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?” ரூ.90/-