குர்து தேசிய இனப் போராட்டம்

எச். பீர்முஹம்மது குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல். ரூ.200/-

காந்தியை கொன்றவர்கள்

மனோகர் மல்கோங்கர் தமிழில் : க.பூர்ணசந்திரன் நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர். அதனால் அவர் மூக்குப் பொட்டு (நாது£, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அக்கம்பக்கத்தவர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். ரூ.300/-

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவதில்லை . இதற்குப் பின்னால் உள்ளநுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிறபெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிறபெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. ரூ.130

இந்தியா எதை நோக்கி?

ராமச்சந்திர குஹா/லீனாகீதா ரெகுநாத்/தினேஷ் நாராயணன் /வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்  தொகுப்பும் மொழியாக்கமும் :  செ.நடேசன் சங்பரிவாரங்களின் சகிப்பின்மை   நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல்  ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம். ரூ.150

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் “நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு? ரூ.90

அவரை வாசு என்றே அழைக்கலாம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள  சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார் . இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக, வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் . இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள  “வாசு” ஒரே நேரத்தில்  தோழராகவும், புரட்சியாளனாகவும், நண்பனாகவும், அந்நியனாகவும் இருந்துள்ளார்.  இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை  சுப்ரன்ஷு சௌத்ரி  வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து  பெறப்பட்ட உண்மைக்  கதைகள் மற்றும் தரவுகளின் மூலம்  மாற்றியமைக்கிறார். இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான, பாகுபாடற்ற, நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது. ரூ.180/-

26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா… ரூ.65/-

பொறுப்பு மிக்க மனிதர்கள்

ஆசிரியர்: மனு ஜோசப் இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது. -டெஹல்கா ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தான் இருக்கின்றோம். -பிஸினஸ் ஸ்டேன்டர்டு. ரூ.250/-

வேர்கள்

அலெக்ஸ் ஹேலி தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன் ‘வேர்கள்’ இரு கண்டங்களின், இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் துயர்மிகு வரலாறு. 1976ல் ‘வேர்கள்’ வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ‘வேர்கள்’ இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது.தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50 க்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. ரூ.999/-

வெண்ணிற இரவுகள்

ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி தாஸ்தோவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். ரூ.70/-