மோடி அரசாங்கம்:வகுப்புவாதத்தின் புதிய அலை

சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி “சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ்.தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.” …மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இடதுசாரிகளும்,ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும்,கருத்துகளையும் கொண்ட நூல். ரூ.160/-

பொலிவியா:சேகுவேரா இன்றும் வாழ்கிறார்

டி.லட்சுமணன் சே குவேராவின் எண்ணத்தை ஈடேற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக லத்தீன் அமெரிக்காவில் சாவேஸ்,மெரால்ஸ் திகழ்கிறார்கள்.இந்நூல் பொலிவியாவின் சமீபத்திய அரசியல் மாற்றத்தை விவரிக்கிறது. ரூ.15/-

ஈழத்து நாட்டார் பாடல்கள்

ஈழவாணி நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. – கலாநிதி ந.இரவீந்திரன் ஈழத்தில் நிலவிய தாலாட்டு முதல் ஒப்பாரி முடிய அனைத்துப் பாடல்களையும் ஒரே தொகுப்பாக, ஒரே நூலாகத் தந்திருக்கும் ஈழவாணியின் முயற்சி பாராட்டிற்குரியது. – கழனியூரன் ரூ.180/-

மறைவாய் சொன்ன கதைகள்

கி. ராஜநாராயணன் கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை. ரூ.290/-

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்

கழனியூரன் ‘நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக்கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன. 111கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது. ரூ.175/-

சூஃபி கதைகள்

சஃபி நூற்றாண்டு காலங்களாக சூஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி கதைகள் இருந்திருக்கின்றன. உலகின் மாபெரும் மதங்களும் வழிபாட்டு முறைகளும் அடிப்படையில் வலியுறுத்தும் ஆதாரமான உண்மை ஒன்றே என்று பெரும்பாலான சூஃபிக்கள் கருதுகின்றனர். இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்தக் கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கும் கொண்டவை மட்டுமல்ல, நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை. ரூ.250/-

என்றார் முல்லா

சஃபி வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர் இந்தக் கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும், அவை உண்மையைப் பிரகாசிக்க வைக்கக் கூடியவை. ரூ.160/-

நகுலன் வீட்டில் யாருமில்லை

எஸ். ராமகிருஷ்ணன் நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது.. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன. ரூ.110/-

சுஜாதா பதில்கள் (இரண்டாம் பாகம்)

சுஜாதா சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. ரூ.140/-

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்

சுஜாதா கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? , சாதிகளை ஒழிப்பது எப்படி? , வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா?, முட்டாளை அடையாளம் காண வழி உண்டா?, இறந்தவர்களுடன் பேசமுடியுமா? ,செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்?, நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? ,சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்? ரூ.145/-