ஒப்பந்த பணியாளர்கள்

கே.விஜயன் பாட்டாளி வர்க்கத்தின் கடைசிப் படிநிலையாய் செய்யும் வேலைக்கோ உடலுக்கோ உயிருக்கோ எந்தவித பாதுகாப்பும் இல்லாது நவீன முதலாளித்துவத்தின் உச்சபட்ச சுரண்டலில் வாடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து விளக்குகிறது. ரூ.10/-

இன்சூரன்சில் அந்நிய முதலீடு

க.சுவாமிநாதன் இது ஓர் பொருளாதார சூதாட்டம்.இதில் தார்மீக நெறிகளுக்கு இடம் கிடையாது-எளியவர்களுக்கு எதிரான அரசியலே உண்டு. ரூ.10/-

நந்தவனம்

வெ.மன்னார் “விவேகானந்தர் சூழலியல் அறிவியல் தமிழ்,தீண்டாமை எதிர்ப்பு,பொதுச் சிவில் சட்டம்,வாக்களிப்பதின் அவசியம் என இந்த நந்தவனத்தில் பூத்துள்ள கட்டுரைகள்.பல வண்ணம் கொண்டவை.ஆனால் எல்லா கட்டுரைகளுக்கும் வேருக்கு நீராக இருப்பது மார்க்சியம்.” ரூ.90/-

வாசிப்பு முறையின் அரசியல்

பாலாஜி சம்பத் இந்தப் புத்தகம் தேர்வின் தேவையைப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது.தேர்வுகளைப் பற்றி நாம் நம்பும் பல விஷயங்கள் உண்மை அல்ல.தேர்வு முறையில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்றும் இப்புத்தகம் வெளிக்கொண்டு வருகிறது. ரூ.20/-

அமெரிக்கா அல்கெய்தா இரு பயங்கரவாத வரலாறு

எஸ்.ஜி.ரமேஷ்பாபு சதாம் உசேனை,பின்லாடனை உருவாக்கி உலவவிட்டுப் பிறகு அழித்தொழிக்கும் அமெரிக்க சர்வதேச கிரிமினல் தனங்களின் பின்னணி என்ன?குறிப்பாக ஓஸாமா பின்லாடன் என்னும் தீவிரம் உருவாகி வளர்ந்து அமெரிக்கா என்னும் மற்றொரு அதிதீவிரத்துடன் மோதிப்பார்த்த,உலகமே வியந்து கவனித்த அந்த நிகழ்வுகளை எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்நூலில் சுவாரசியம் குறையாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார். ரூ.80/-

ஒரு கோடி அமிலக் கண்கள்

பிரேம பிரபா “தோற்றுக் கொண்டேயிருக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் கெட்டிக்காரியான கிராமத்துப் பாட்டியின் வாசனையோடும்,தனிமையில் மௌனத்தின் துணையோடும்,சாம்பல் நிற சுடுகாட்டு நாய்களின் நிஜ நிறம் காண ஒரு கோடி அமிலக் கண்கள் தொடர் மழையை வேண்டி காத்திருக்கின்றன இக்கவிதைத் தொகுப்பெங்கும்.” ரூ.80/-

பசுவின் புனிதம்

வெ.கோவிந்தசாமி “இஸ்லாமியர்கள்,தலித் மக்களுக்கெதிரான வன்மத்தைத் தூண்டி அரசியல் ஆதாயங்களுக்காகவும்,வரலாற்றைத் திரிப்பதற்காகவும் இந்துக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் இந்துத்துவ ஃபாசிச சக்திகள் பரப்பி வருகின்ற பிரச்சாரங்கள் எந்தவொரு ஆதாரமும்இல்லாதவை என்பதை வரலாற்றின் துணைகொண்டு விளக்குகின்றது.மேலும் நிகழ்கால அரசியல் சூழலில்,மதவெறி சக்திகளிடம் இரையாகிவிடாமல் விழிப்புடன் இருப்பது எப்படி என்று நமக்குக் கற்றுத்தருகிறது இந்நூல்.” ரூ.100/-  

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும்

பெ.சண்முகம் “வாச்சாத்தி….தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம். 1992க்கு முன்பு இப்படி ஒரு ஊர் இருப்பதே யாருக்கும் தெரியாது.இன்று இந்த கிராமத்தின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற அளவுக்கு பிரபலம்.அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலையோ மதிப்பிட முடியாதது.காரணம் எதுவுமின்றி அப்பாவி மலைவாழ்மக்கள் வனத்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.இளம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.நினைத்துப் பார்க்க இயலாத கொடுமைகள் அவர்களின் மீது அரங்கேற்றப்பட்டன.அப்போதைய ஜெயலலிதா அரசு இதை மௌனமாய் வேடிக்கை பார்த்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டக் களங்கள் இன்றைக்கு அந்த மக்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் தேடித் தந்திருக்கிறது.இந்த நீண்ட போரட்டத்தை அதன் வெம்மை மாறாது இந்நூல் பதிவு செய்திருக்கிறது.” ரூ.5/-

இலங்கை தமிழ் மக்களின் துயரம்

பிரகாஷ் காரத் தற்போது பயங்கரவாதமும் இல்லை.தமிழ் ஈழம் கேட்கவில்லை.தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைத் தான் கேட்கிறார்கள்.குறைந்தபட்சம் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை;தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு சுயாட்சி பிரதேசம்””வேண்டுமென்பது தான்… ரூ.20/-