காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்

அருணன் பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது.இரட்டை வாக்குரிமைதான் இருத்தி லட்சியம் என அம்பேத்கர் கருத்திருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை என் சேர்க்கவில்லை?இது போன்ற கேள்விகளுக்கு நீதானமான விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம். ரூ.25/-

மார்கசிய பார்வையில் அன்னை தெரசா

ராமசந்திர வைத்தியநாதன் அன்னை தெரசாவைப் பற்றி அவரது சேவைகளைப்பற்றியும் இதுவரை கூறப்படாத ஒரு புதிய கண்னோட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார்,இந்நூலின் ஆசிரியர் ரூ.5/-

மாறும் காட்சிகள்(ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்)

அ.ராமசாமி ரஜினிகாந்த் எண்ணும் நடிகர் திரைப்படத்தில் உலா வரும் பிம்பமாகவும் அப்பிம்பத்திற்காக எழுதப்பட்ட வசனங்களாலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல வகையானவை.மக்ாளாட்சித் தத்துவதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக மாறும் போக்கில் அந்தத் தாக்கங்கள் உண்டாக்கக் கூடிய விளைவுகள் பல தளத்தில் வினையாற்றக் கூடியவை.அவரே நேரடியாக அரசியலுக்கு வரவிட்டாலும் அவரது தாக்கத்தால் திரட்டப்படும் பெருங்கூட்டம் எத்தகைய தலைமையை அல்லது இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் எனபுரிந்து வைத்துக் கொள்வது நமது காலத்தின் தேவை ரூ.15/-

மாவோயீஸம் இடதுசாரிகளின் விமர்சனம்

தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி இக்கட்டுரையில் இடது குறுங்குழுவாதம் குறித்து காத்திரமாக விவாததிக்கின்றன.இந்தியாவின் சி.பி.ஐ?(மாவோயீஸ்ட்)மற்றும் இடதுசாரி சாகசங்களின் சர்வதேச அனுபவங்களைப் பற்றியும் இந்திய மாவோயீஸ்துகளின் செயல் திட்டத்தை தத்துவர்த்த ரீதியான விமர்சனத்திருக்கு உட்படுத்துக்கிறது. ரூ.80/-

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?

பி.சீனீவாசராவ் 1947களில் தஞ்சை ஜில்லா விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிரசுதாரர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் கூறுகின்றன.ஏன்? 1947களில் தஞ்சை ஜில்லாவில் நடந்தது என்ன?உண்மை விவரங்களை இந்நூல் விளக்குகிறது. ரூ.15/-

ஹரப்பா வேதங்களின் நாடா?

த.வி.வெங்டேஸ்வரன் வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான்,ஆதிக் கலாசாரமான ஹரப்பா/மொஹஞ்சதரோ கலாசாரம் ஆரிய மரபுதான்,ஆரியார்கள் வெளியிலிருந்து வரவில்லை,இங்கிருந்துதான் வெளியே போனார்கள்.ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏறளமான’வரலாற்று உண்மைகள்’எல்லாம் சங்பரிவாரங்கள் அவுத்து விடும் சரடு,திரித்து விடும் கயிறு,என்பதை வலுவான வரலாற்று மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் இப்புத்தகம் ரூ.10/-

வரலாறு சமூகம் மற்றும் நில உறவுகள் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

தமிழில்:அசோகன் முத்துசாமி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு அதிகாரத்திற்கு வந்த உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய15கட்டுரைகளின் செறிவான தமி ழக்கம் இப்பிரதி.பொருள் முதல் வாதம்.உற்பத்தி முறை வார்க்கப்போராட்டம். ரூ.160/-

அயோத்தியில் ராமன்

தமிழில்:கி.ரமேஷ ராமனின் பெயரால் ராம பக்தர்கள் எனக் கூறிக்கொண்டு இன்று ஏத்தகைய அக்கிரமங்கள் அரங்கேறிக் கொன்டுருகின்றன!வால்மீகி படைத்த உண்மையான ராமனுக்கும் இவர்கள் கீழ்ப்பிவிடுகிற ராமனுக்கும் இடையே எத்தனை எத்தனை வேறுபாடுகள்!கொல்கத்தவின் ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னால் சமஸ்கிருததப் பேராசிரியர் சுகுமாரி பட்டசாரிஜி தனது ஆய்வு கட்டுரையில் இந்த வேறுபாடுகளை அலசுகிறார்.சோசியல் சயின்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரை இது. ரூ.15/-